கோவாவில் நடக்கவிருக்கும் கீர்த்தி சுரேஷ் திருமணம்!! இதுவும் வதந்தியா என கேட்கும் ரசிகர்கள்!!

Photo of author

By Gayathri

குழந்தை நட்சத்திரமாகவே மலையாள படங்களில் நடித்துள்ள கீர்த்தி சுரேஷ், கடந்த 2013ம் ஆண்டில் பிரியதர்ஷன் இயக்கத்தில் வெளியான கீதாஞ்சலி படத்தின்மூலம் மலையாளத்தில் நாயகியாக என்ட்ரி கொடுத்திருந்தார். தொடர்ந்து ரிங் மாஸ்டர் படத்திலும் நடித்திருந்தார். இதையடுத்து தமிழில் இது என்ன மாயம் படத்தின்மூலம் அறிமுகமானவர், ரஜினி முருகன், ரெமோ, பைரவா, தானா சேர்ந்த கூட்டம் என அடுத்தடுத்து முன்னணி நடிகர்களுடன் நடித்திருக்கிறார்.

இவருக்கு ஏற்கனவே இரண்டு முறை திருமணம் நடைபெற உள்ளதாக வெளியான தகவல்கள் வதந்தி என்று இவருடைய அப்பா அவர்கள் கூறியிருந்தார். அதாவது முதலில், கேரளாவின் அரசியல்வாதியின் மகனை கீர்த்தி சுரேஷ் திருமணம் செய்யவுள்ளதாக கூறப்பட்டது. தொடர்ந்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு பிரபல இசையமைப்பாளர் அனிருத்தை கீர்த்தி திருமணம் செய்யவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் இந்த வதந்திகளுக்கு அவரது அப்பா விளக்கம் கொடுத்திருந்தார்.

இந்நிலையில் தற்பொழுது, கீர்த்தி சுரேஷின் திருமணம் குறித்து அடுத்தடுத்து சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியாகி வருகின்றன. அவர் அடுத்த மாதத்தில் தன்னுடைய திருமணத்தை கோவாவில் பிரம்மாண்டமாக நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நடிகை கீர்த்தி சுரேஷ் அடுத்தடுத்து தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி மொழி படங்களில் நடித்து வருகிறார். இவரது அடுத்தடுத்த படங்கள் தமிழில் ரிலீசாகி வருகின்றன.
இந்த நிலையில், இத்தகவல் குறித்த முழுமையான உண்மை நிலை தெரியவில்லை. ஆனால் கீர்த்தி சுரேஷின் தரப்பில் இருந்தும் இதற்கான எந்தவித மறுப்பும் தற்போது வரையில் வெளிப்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.