கீர்த்தி சுரேஷ் தன்னுடைய திருமணம் குறித்த அப்டேட் வெளியிட்டு ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறார். இவருக்கு பலமுறை திருமணம் நிகழ்வு இருப்பதாக பரவிய வதந்திகளை எல்லாம் பொய்யாக்கும் வண்ணம் தற்பொழுது தன்னுடைய 15 ஆண்டுகால நண்பரான ஆண்டனி என்பவரை திருப்பதியில் மணமுடிக்க உள்ளதாக தெரிவித்திருக்கிறார்.
இந்நிலையில், விஷால் குடும்பத்தினர் நடிகை கீர்த்தி சுரேஷ் அவர்களே பெண் கேட்டுள்ளனர் என்ற தகவல் வேகமாக பரவி வருகிறது.
சண்டக்கோழி 2 படத்தின் படப்பிடிப்பின் பொழுது விஷால் மற்றும் கீர்த்தி சுரேஷ் ஜோடி பொருத்தம் நன்றாக இருந்த நிலையில் அப்படத்தின் இயக்குனரான லிங்குசாமியிடம் விஷாலின் பெற்றோர் கீர்த்தி சுரேஷ் இடம் கேட்டு பாருங்களேன் எனக்கு கூறி இருக்கின்றனர்.
அதற்கு நடிகை கீர்த்தி சுரேஷ் அவர்கள், நான் என்னுடைய பாலிய சிநேகிதனான ஆண்டனி என்பவரை தான் காதலித்து வருகிறேன் என்று திட்டவட்டமாக கூறிவிட்டார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்செய்தியானது நடிகர் விஷாலின் குடும்பத்திற்கு மன வருத்தத்தை அளிப்பதாக இருந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.