முல்லைப் பெரியாறு அணை விவகாரம்! தமிழக முதல்வருக்கு கடிதம் எழுதிய பினராயி விஜயன்!

Photo of author

By Sakthi

கேரள மாநில முதலமைச்சர் பதாராய் விஜயன் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களுக்கு இன்று ஒரு கடிதம் எழுதியிருக்கிறார்.

அதில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது கேரள மாநிலத்தில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது என்பது தங்களுக்கு நன்றாக தெரியும்.

முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் 136 அடியை நெருங்கி இருக்கின்ற சூழ்நிலையில், இடுக்கி போன்ற கேரளாவின் பல மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்திருக்கிறது. அதற்கேற்றவாறு மழை பெய்து வருகிறது என கூறி இருக்கிறார் பினராய் விஜயன்.

இதே நிலை தொடர்ந்து நீடித்து வந்தால் அணையின் நீர்மட்டம் மிகவும் கடுமையாக உயர்வதற்கான அபாயம் ஏற்படும். தற்போது அனைத்து அதிக அளவு நீர் வரத்து இருக்கிறது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆகவே முல்லைப் பெரியாறு அணையின் நீர் பிடிப்பு பகுதியில் நிலை விவரம் இது போன்ற அபாயகரமான சூழ்நிலையை உங்கள் கவனத்திற்கு கொண்டுவர விழைகிறேன். இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்தபடி மழை பெய்வதால் அணைக்கு நீர் வரத்து அதிகமாக இருக்கிறது.

ஆகவே அணையின் நீர்மட்டத்தை சீராக குறைக்க வேண்டும் என்று விரும்புகிறேன் இந்த விவகாரத்தில் நீங்கள் உடனடியாக தலையிட்டு முல்லை பெரியாறு அணையின் நீர் பிடிப்பு பகுதியில் பெய்து வரும் மழையை கருத்தில் கொண்டு அணையில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீரை விட அதிகமாக நீர் இருப்பதை உறுதி செய்ய படிப்படியாக நீரை திறந்து விட சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்துமாறு கேட்டுக் கொள்கிறேன் என்று அந்த கடிதத்தின் மூலமாக முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களுக்கு பினராயி விஜயின் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.

அதோடு முல்லைப் பெரியாறு அணையின் கீழ் வசித்து வரும் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் விதத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளும் விதத்தில் அணையின் ஷட்டரை திறப்பதற்கு 24 மணி நேரத்திற்கு முன்பாகவே கேரளா அரசுக்கு தகவல் தெரிவிக்க ஏற்பாடு செய்ய வேண்டும் எனவும், இந்த கடிதத்தின் மூலமாக அவர் கேட்டுக் கொண்டிருக்கிறார்.