அதிமுகவினருக்கு கட்டளையிட்ட எடப்பாடி பழனிச்சாமி!

0
85

நாட்டின் 75வது சுதந்திர தின விழா வருகின்ற 15ஆம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதற்காக பிரமாண்ட ஏற்பாடுகளை மத்திய, மாநில, அரசுகள் நாடு முழுவதும் செய்து வருகின்றன.

இந்த நிலையில், சுதந்திர தினத்தன்று நாடு முழுவதும் குடிமக்கள் அனைவரும் அவரவர் வீடுகளில் தேசிய கொடியை ஏற்றி சுதந்திர தின விழாவை கொண்டாட வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி கோரிக்கை விடுத்தார்.

இந்த நிலையில், தமிழக எதிர்க்கட்சித் தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டிருக்கின்ற செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது நம்முடைய நாட்டின் 75 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு கொடிகாத்த திருப்பூர் குமரன் போன்ற சுதந்திர போராட்ட வீரர்களை நினைவு கூறுவோம்.

பிரதமர் நரேந்திர மோடி கூறிய நம் அடிப்படையில் எதிர்வரும் 13-ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரையில் பொதுமக்கள் எல்லோரும் அவரவர் வீடுகளில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து நம்முடைய நாட்டுப் பற்றையு,ம் தேச ஒற்றுமையையும் வளர்ப்போம் என கூறியிருக்கிறார்.