கேரளா மலப்புரம் படகு விபத்து! இது தான் படகு கவிழ்ந்ததற்கு காரணம்!!

Photo of author

By Sakthi

கேரளா மலப்புரம் படகு விபத்து! இது தான் படகு கவிழ்ந்ததற்கு காரணம்!!

Sakthi

Updated on:

கேரளா மலப்புரம் படகு விபத்து! இது தான் படகு கவிழ்ந்ததற்கு காரணம்.
நேற்று முன்தினம் இரவு கேரளா மாநிலம் மலப்புரம் அருகே படகு கவிழ்ந்ததற்கு காரணம் என்ன என்பதை ஆய்வு செய்த அதிகாரிகள் கூறியுள்ளனர்.
நேற்று முன் தினம் அதாவது கடந்த மே 7ம் தேதி இரவு கேரளா மாநிலம் மலப்புரம் அருகே பயணிகளை ஏற்றிச் சென்ற சுற்றுலா படகு நீரில் மூழ்கி விபத்துக்குள்ளானது. இதில் 22 பயணிகள் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்தில் சிக்கியவர்களில் சிலர் மருத்துவதமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த விபத்து கேரளா மாநிலம் முழுவதும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கின்றது. நேற்று அதாவது மே 8ம் தேதி விபத்து நடந்த இடத்தை ஆய்வு செய்த கேரளா மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் அவர்கள் உயிரிழந்தோரின் குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறினார். மேலும் உயிரிழந்தோரின் குடும்பத்தாருக்கு நிவாரணத் தொகையும் அறிவித்தார்.
இதையடுத்து படகு கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானதற்கு பயணிகளின் கூட்டம் தான் காரணம் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர். படகில் அளவுக்கு அதிகமாக சுற்றுலா பயணிகளை ஏற்றி சென்றதால் தான் படகு கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது என்று ஆய்வு செய்த அதிகாரிகள் கூறியுள்ளனர்.
படகில் சென்ற சுற்றுலா பயணிகள் லைப் ஜாக்கெட் அணியாததால் பெரும் உயிர்ச் சேதம் ஏற்பட்டுள்ளது. படகு விபத்தில் உயிரிழந்த 22 பேரில் 15 குழந்தைகள் என்பது மேலும் வருத்தத்தை அளிக்கின்றது.