Kerala Recipe: கேரளா மட்டா அரிசி உப்புமா! இப்படி செய்தால் ருசி கூடும்!
கேரளா மட்டா அரிசியை உடைத்து வறுத்து ரவை செய்தால் சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.இந்த மட்டா அரிசி உப்புமா சுவையாக செய்வது குறித்து விளக்கப்பட்டுள்ளது.
தேவையான பொருட்கள்:-
1)உடைத்த மட்டா அரிசி – 1 கப்
2)பெரிய வெங்காயம் – 1
3)தேங்காய் எண்ணெய் – 3 தேக்கரண்டி
4)கடுகு – 1 தேக்கரண்டி
5)கறிவேப்பிலை – 1 கொத்து
6)உப்பு – தேவையான அளவு
7)வெள்ளை உளுந்து – 1 தேக்கரண்டி
செய்முறை:-
அடுப்பில் ஒரு வாணலி வைத்து உடைத்த மட்டா அரிசி சேர்த்து மிதமான தீயில் லேசாக வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
பிறகு பெரிய வெங்காயம் ஒன்றை நீள வாக்கில் நறுக்கி வைத்துக் கொள்ளவும்.பின்னர் அடுப்பில் ஒரு வாணலி வைத்து தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும்.
பிறகு வெள்ளை உளுந்து,கடுகு சேர்த்து பொரிய விடவும்.அதன் பின்னர் கறிவேப்பிலை மற்றும் நறுக்கிய வெங்காயம் சேர்த்து மிதமான தீயில் வதக்கவும்.
வெங்காயம் வதங்கி வந்த பின்னர் தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்கவும்.அதன் பிறகு 2 கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.
பின்னர் வறுத்த மட்டா அரிசியை சேர்த்து கிளறி இறக்கினால் சுவையான சுவையான மட்டா அரிசி உப்புமா தயார்.