Kerala Recipe: கேரளா ஸ்டைல் பிஸ் ப்ரை – சுவையாக செய்வது எப்படி?

Photo of author

By Divya

Kerala Recipe: கேரளா ஸ்டைல் பிஸ் ப்ரை – சுவையாக செய்வது எப்படி?

Divya

Kerala Recipe: Kerala Style Bis Bri - How to make it delicious?

Kerala Recipe: கேரளா ஸ்டைல் பிஸ் ப்ரை – சுவையாக செய்வது எப்படி?

கேரளா பாணியில் மீன் ப்ரை மொருமொரு சுவையில் செய்வது குறித்து தெளிவாக விளக்கப்பட்டுள்ளது.

தேவையான பொருட்கள்:-

1)மீன் – 3/4 கிலோ
2)தேங்காய் எண்ணெய் – பொரிக்க தேவையான அளவு
3)தயிர் – 1 ஸ்பூன்
4)உப்பு – தேவையான அளவு
5)மிளகு தூள் – 1 ஸ்பூன்
6)சீரகத் தூள் – 1 ஸ்பூன்
7)இஞ்சி பூண்டு பேஸ்ட் – 2 ஸ்பூன்
8)எலுமிச்சை சாறு – 2 ஸ்பூன்
9)பெருஞ்சீரகத் தூள் – 1 ஸ்பூன்
10)மிளகாய் தூள் – 1 ஸ்பூன்

செய்முறை:-

ஒரு கிண்ணத்தில் 3/4 கிலோ அளவு சுத்தம் செய்த மீன் சேர்க்கவும். மற்றொரு கிண்ணத்தில் 1 ஸ்பூன் தயிர், 1 ஸ்பூன் மிளகு தூள், 1 ஸ்பூன் சீரகத் தூள், 1 ஸ்பூன் பெருஞ்சீரகத் தூள் சேர்த்து கலந்து விடவும்.

அடுத்து 1 ஸ்பூன் மிளகாய் தூள், 2 ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து பேஸ்டாகவும்.

அதன் பின்னர் 2 ஸ்பூன் எலுமிச்சை சாறு ஒரு தேக்கரண்டி தேங்காய் எண்ணெய் சேர்த்து கலக்கினால் மீன் ப்ரை பேஸ்ட் தயார்.

இந்த பேஸ்ட்டில் எடுத்து வைத்துள்ள மீனை போட்டு நன்கு பிரட்டி எடுக்கவும். மசாலா மீனில் ஊறுவதற்காக 30 நிமிடங்கள் காத்திருக்கவும்.

பிறகு அடுப்பில் ஒரு வாணலி வைத்து மீன் பொரிக்க தேவையான அளவு தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும்.

பிறகு மசாலாவில் ஊறவைத்த மீனை ஒவ்வொன்றாக போட்டு பொரித்தெடுத்துக் கொள்ளவும். பொரித்த மீன் மீது எலுமிச்சை சாறு பிழிந்து பெரிய வெங்காயம் வைத்து சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும்.