கேரள கழிவுகள் தமிழ்நாட்டில் இந்த நிலை ஏன்? ஐகோர்ட் நீதிபதிகள் வேதனை! விளக்கம் அளிக்க அரசுக்கு உத்தரவு!

Photo of author

By Amutha

கேரள கழிவுகள் தமிழ்நாட்டில் இந்த நிலை ஏன்? ஐகோர்ட் நீதிபதிகள் வேதனை! விளக்கம் அளிக்க அரசுக்கு உத்தரவு!

Amutha

கேரள கழிவுகள் தமிழ்நாட்டில் இந்த நிலை ஏன்? ஐகோர்ட் நீதிபதிகள் வேதனை! விளக்கம் அளிக்க அரசுக்கு உத்தரவு!

கேரளாவின் மருத்துவ கழிவுகளை தமிழ்நாட்டில் கொட்டுவதா? உயர் நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது. இது குறித்த உரிய அறிக்கை சமர்ப்பிக்குமாறு அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

கேரளாவில் இருந்து வரும் மருத்துவ கழிவுகள் நெல்லை மற்றும் தென்காசி மாவட்ட எல்லையில் கொட்டப்படுவதாக கடந்த 2018 ஆம் ஆண்டு தென்காசியை சேர்ந்த சிதம்பரம் என்பவர் நெல்லை மாவட்ட நீதிமன்றத்தில்  வழக்குத் தொடுத்து இருந்தார். இதனை அடுத்து நீதிமன்ற உத்தரவின் கீழ் மாவட்ட ஆட்சியர் தலைமையில் குழு அமைக்கப்பட்டது.

ஆனால் அந்த நீதிமன்ற உத்தரவு சரிவர நடைமுறைப்படுத்தவில்லை என்றும் மீண்டும் கேரளாவில் இருந்து கழிவுகள்  தொடர்ந்து நெல்லை தென்காசி மாவட்டங்களில் கொட்டப்பட்டு வருவதால், மாவட்ட ஆட்சியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நீதிமன்றத்தை அவமதித்த வழக்கு மதுரை  உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்யப்பட்டது.

இது குறித்த மனு இன்று நீதிபதிகள் முன்பு விசாரணைக்கு மதுரை ஐகோர்ட் கிளைக்கு வந்தது.  தமிழகத்திலிருந்து மணல் கற்கள் என கனிம வளங்கள் கேரளாவிற்கு கொண்டு செல்லப்படுகின்றன. ஆனால் கேரளாவில் இருந்து மருத்துவக் கழிவுகள் தமிழ்நாட்டில் கொண்டுவரப்பட்டு கொட்டப்படுகின்றன. இந்த நிலை ஏன்?

என்று நீதிபதிகள் வேதனை தெரிவித்தனர். மேலும் கேரளக் கழிவுகள் தமிழகத்தின் எல்லையோர மாவட்டங்களில் கொட்டப்படுகிறது என்பது குறித்து உரிய விளக்க மனு அளிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு உத்தரவிட்டு இந்த வழக்கை பிப்ரவரி மாதத்திற்கு ஒத்தி வைத்தனர்.