முதல் முறையாக தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக போகும் KGF 2!

Photo of author

By Vinoth

முதல் முறையாக தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக போகும் KGF 2!

கே ஜி எஃப் 2 திரைப்படம் இந்த ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படங்களில் ஒன்றாகியுள்ளது.

கன்னட சினிமாவை உலகமெங்கும் திரும்பி பார்க்க வைத்த திரைப்படம் எது என்றால் KGF இரண்டு பாகங்களையும் கண்ணை மூடிக்கொண்டு சொல்லலாம்.. நடிகர் யாஷ்  நடித்த இந்த திரைப்படங்கள் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு அனைத்து மொழிகளிலும் நல்ல வரவேற்ப்பை பெற்றது.

கடந்த ஏப்ரல் 14 ஆம் தேதி ரிலீஸான கேஜிஎஃப் 2 திரைப்படம் உலகம் முழுவதும் திரையரங்குகள் மூலமாக மட்டும் சுமார் 1200 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்துள்ளதாக சொல்லப்படுகிறது. அதன் பின்னர் ஓடிடியில் வெளியாகி அங்கும் மிகப்பெரிய அளவில் பார்வையாளர்களைக் கவர்ந்தது.

இந்நிலையில் தற்போது அந்த படத்தின் தொலைக்காட்சி பிரிமீயர் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. ஜி நிறுவனம் அனைத்து மொழிகளிலும் இந்த படத்தின் உரிமையைக் கைப்பற்றியுள்ளது. இதையடுத்து ஜி தமிழில் ஆகஸ்ட் 31 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி அன்று இந்த படம் மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கேஜிஎஃப் 2 படத்துக்கு பின்னர் யாஷ் இன்னும் தன்னுடைய அடுத்த படத்தை அறிவிக்கவில்லை. இயக்குனர் பிரசாந்த் நீல் தற்போது பிரபாஸ் நடிப்பில் சலார் என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தை முடித்த பின்னர் ஜுனியர் என் டி ஆர் நடிக்கும் படத்தை இயக்க உள்ளார்.