காட்டுமிராண்டித்தனமான கேஜிஎப் 2 வில்லன் போஸ்டர்!

0
140

கன்னட சினிமா துறையில் மாஸ் ஹிட் கொடுத்த கேஜிஎப் சாப்டர்1 படமானது கன்னடத்தில் மட்டுமல்ல, அனைத்து மொழிகளிலும் பெரிதும் பேசப்பட்டது. இப்படத்தின் கதாநாயகன் யாஷ்,, முன்னணி கதாநாயகனாக வளர்வதற்கு இப்படமே உறுதுணையாக இருந்தது.

கேஜிஎப் சாப்டர்2 எப்போது ரிலீசாகும்? என்ற ஆவல், சினிமா  ரசிகர்களின் எதிர்பார்ப்பாகும். அதற்கு தகுந்தார் போலவே, இப்படத்தில் உள்ள அனைத்து கதாபாத்திரங்களையும் இந்திய அளவில் பிரபலமானவர்களை தேர்வு செய்து வருகின்றனர்.

இப்படத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் கதாபாத்திரம் ஆதிரா. இந்த கேரக்டரில் சஞ்சய் தத் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

கே ஜி எஃப் 2 படத்தின் சஞ்சய் தத்துக்கு  மிருகத்தனமான  கதாபாத்திரமே, அவருக்கு கிடைத்துள்ளதாம். இப்படத்தின் வில்லன் ஃபேஸ்புக்  சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.இந்த போஸ்டரை பார்த்த ரசிகர்கள் வியப்பின்  உச்சத்தை அடைந்தனர்.

இதைப் பார்த்த திரை உலகமே, இப்படம் மாஸ் ஹிட் கொடுக்கும் என்றுபடக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்த வண்ணம் வருகின்றனர்.

 

Previous articleபேருந்துகள் இயக்கப்படுமா? போக்குவரத்துத் துறை அளித்த முக்கிய தகவல் இதோ!
Next articleஇறுதியாண்டு செமஸ்டர் தேர்வை ஆன்லைனில் நடத்த திட்டம்!