ரசிகர்களை ஏமாற்றிய கே.ஜி.எஃப் படக்குழு!! இப்பத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப் போகுமா என்ற குழப்பத்தில் ரசிகர்கள்!!

Photo of author

By CineDesk

ரசிகர்களை ஏமாற்றிய கே.ஜி.எஃப் படக்குழு!! இப்பத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப் போகுமா என்ற குழப்பத்தில் ரசிகர்கள்!!

தமிழ் சினிமா வட்டாரங்களில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படம் கே.ஜி.எஃப் இந்த படத்தை கன்னட ஹீரோவான யாஷ் அவர்கள் ஹீரோவாக நடித்திருந்தார். இது 2018 ஒளிபரப்பான படமாகும். மேலும் இப்படத்தில் நடிகர் யாஷ் முக்கிய கதாபாத்திரமான ராக்கி என்னும் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். ராமச்சந்திர ராஜு கருட வாக நடித்திருந்தார். இந்தப் படம் 80 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டது. மேலும் கே.ஜி. எஃப் படம் வெளியான நேரத்தில் மிகவும் விலை உயர்ந்த கன்னட படமாக அமைந்தது. இந்த படம் வறுமையில் வாழும் ராகியை மையமாகக் கொண்டுள்ளது. ஆனால் மும்பையில் ஒரு உயர்தர கும்பலாக வளர்கிறார். இருப்பினும் அவர் நராச்சி நிறுவனத்தில் தன்னை அடிமையாக காட்டிக்கொண்டு சீர்திருத்த படுகிறார்.

மேலும் வழிபாட்டின் எதிர்காலம் வாரிசான கருடா படுகொலை செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளார். இந்த படம் தமிழில் டப் செய்யப்பட்டு தமிழிலும் அதிகளவு வரவேற்ப்பை பெற்றது. இதைத் தொடர்ந்து தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகம் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. மேலும் இப்படத்தை ரசிகர்கள் பெருமளவில் எதிர்பார்த்து வருகின்றனர். மேலும் இப்படத்தை இம்மாதம் வெளியிடுவதாக படக்குழு திட்டமிட்டிருந்தது. ஆனால் கொரோனா பரவல் இரண்டாம் அலை காரணமாக திரையரங்குகள் அனைத்தும் மூடப்பட்டு இருப்பதால் படத்தின் வெளியீட்டு தேதியை படக்குழு ஒத்தி வைத்துள்ளது. இதை தொடர்ந்து இப்படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் முடிந்த நிலையில் இப்படம் வரும் டிசம்பர் மாதம் கிறிஸ்துமஸ் பண்டிகையன்று வெளியாகும் என்றும் மேலும் அந்த அறிவிப்பை நடிகர் சாய் தத் பிறந்த நாள் அன்று வெளியிடும் என்றும் தகவல் வெளியாகியிருந்தது.

இந்நிலையில் நடிகர் சாய் தத் பிறந்த நாளான இன்று பட குழுவிடமிருந்து தகவல் ஒன்று வெளியாகி இருந்தது. ஆனால் அது ரசிகர்களை ஏமாற்றும் வகையில் அந்த படத்தின் அறிவிப்பு இருந்தது. அது என்னவென்றால் அப்படத்தில் போஸ்டரில் சாய் தத் லுக் மட்டுமே இருந்தது. அதை தொடர்ந்து படத்தின் ரிலீஸ் தேதி பற்றி எந்த ஒரு அறிவிப்பும் இல்லாததால் ரசிகர்கள் பெருமளவில் ஏமாற்றத்தில் உள்ளனர். இப்படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.