சூப்பர் ஸ்டாருடன் இணையும் KGF ஹீரோ!! இணையத்தில் வெளிவந்த மாஸ் நியூஸ்!!

0
358
KGF Hero joins Superstar!! Mass News that appeared on the Internet!!
KGF Hero joins Superstar!! Mass News that appeared on the Internet!!

சூப்பர் ஸ்டாருடன் இணையும் KGF ஹீரோ!! இணையத்தில் வெளிவந்த மாஸ் நியூஸ்!!

2018 ஆம் ஆண்டு வெளிவந்த KGF சேப்டர் 1 என்ற  கன்னட படத்தில்  யாஷ் நடித்து புகழின் உச்சிக்கு சென்றவர்.மேலும் இத்திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளிலும் வெளிவந்ததது. 250 கோடிக்கு மேல் வசூல் சாதனை படைத்தது.மேலும் யாஷ் கதாநாயகனாக நடித்த இத்திரைப்படம் நல்ல வரவேற்ப்பை பெற்றது.

இந்த படத்தின் இரண்டாம் பாகம் 2020 இல் வெளிவந்தது. KGF ஹீரோ யாஷ் இத்திரைப்படத்தின் மூலம் சிறந்த நாயகனாக வலம் வருகிறார்.  இதனையடுத்து இவர்  சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் இணைந்து நடிப்பதாக இணையத்தில் தகவல் வெளிவந்துள்ளது. தற்போது ஜெயிலர் மற்றும் லால் சலாம் படத்தில் ரஜினி நடித்து வருகிறார் . இவர் ஏற்கனவே ஓய்வை அறிவிக்க இருப்பதாக சில மாதங்களுக்கு முன்பு தகவல் வெளியானது.

இந்நிலையில் த.செ. ஞானவேல் படத்தில் நடித்து முடித்ததும் , லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில்  நடிக்க போவதாக தகவல் வெளிவந்தது . ஆனால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. இந்நிலையில் நேர்காணல் ஒன்றில் இயக்குனர் மிஷ்கின் எல்.சி.யு இயக்கத்தில் ரஜினியுடன் நானும் நடிக்க போகிறேன் என்று கூறியுள்ளார்.

மேலும் இந்த படத்தில் கன்னட நடிகர் யாஷ் நடிக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல் வந்துள்ளது. அதனையடுத்து ரஜினியின்  கடைசி படம் இதுதான் என்றும் மிஷ்கின் கூறியது குறிப்பிடத்தக்கது.

Previous articleSC/ST  மாணவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு!! கால அவகாசம் நீட்டிப்பு!!
Next articleமழையினால் அபாயக் கட்டத்தை நெருங்கும் மாநிலம்!! உயிரை கையில் பிடித்தபடி அச்சத்தில் உறைந்த மக்கள்!!