சர்வதேச அளவில் கிரிக்கெட் போட்டியில் ரன் மெஷின் என்று அழைக்கப்படுவர் இந்திய கேப்டன் கோலி இந்தியாவின் மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கரின் 100 சதங்கள் அடித்த சாதனையை இவர் விரைவில் நெருங்குவார் என அனைவரும் எதிர்பார்த்துள்ளனர். மேலும் அனைத்து விதமான போட்டிகளிலும் பேட்டிங்கில் எதிரணியை கலங்கடிக்க கூடியவர்.
அனைத்து விதமான மைதானங்களிலும் கிட்டத்தட்ட சதங்களை அடித்துள்ள கோலி ஒருநாள் போட்டிகளில் இதுவரை 43 சதங்கள் அடித்துள்ளார். ஒருநாள் போட்டியில் சச்சினுக்கு அடுத்த இடத்திலும், அடுத்தடுத்த சதங்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் இரண்டாம் இடத்திலும் உள்ளார்.
அனைத்துவித மைதானங்களிலும் தன் பேட்டிங்கின் மூலம் எதிரணியை கலங்கடித்த கேப்டன் கோலிக்கு இன்று ஒடிசா மாநிலம் கட்டாக் மைதானம் ஒரு ராசியில்லாத மைதானம் ஆகும்.
இங்கு 3 ஒருநாள் போட்டி மற்றும் ஒரு டி20 விளையாடிய அவரது ஸ்கோர் விவரம் 3,22, 1, 8 என படு மோசமாக அமைந்துள்ளது அதாவது நான்கு இன்னிங்ஸிலும் வெறும் 34 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார்.
இது வரை அவர் விளையாடிய மைதானங்களில் இது தான் அவரது மோசமான செயல்பாடாகும் T20 தொடரில் தன் பேட்டிங் மூலம் தொடரை வெல்வதற்கு உறுதுணையாக இருந்தார் கோலி.
இந்நிலையில் சென்னையில் நடந்த முதல் போட்டியில் 4 ரன்களும் விசாகப்பட்டினத்தில் நடந்த இரண்டாவது போட்டியில் டக் அவுட்டாகி சொதப்பி உள்ளார். இதனால் இன்றைய போட்டியில் கிங் கோலி நன்றாக பேட்டிங் செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்.
மேலும் ராசி இல்லாத மைதானம் என்று கூறப்படும் கட்டாக் மைதானத்தில் தன் பேட்டிங் திறமையை நிரூபித்து ராசியில்லாத மைதானம் என்ற மோசமான வரலாற்று நிகழ்வை மாற்றுவார் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.