ஆயிரம் விளக்கு தொகுதியில் குஷ்பூ தான் வெற்றி! மகிழ்ச்சி வெள்ளத்தில் பாஜக வினர்!

Photo of author

By Rupa

ஆயிரம் விளக்கு தொகுதியில் குஷ்பூ தான் வெற்றி! மகிழ்ச்சி வெள்ளத்தில் பாஜக வினர்!

சட்டமன்ற தேர்தலானது நாளை மறுநாள் நடக்க இருக்கிறது.இந்நிலையில் மக்கள் முன்னிலையில் வாக்குகளை பெற பிரச்சாரம் செய்து வருகின்றனர்.ஆயிரம்பேர் தடுத்து நிறுத்தினாலும் ஆயிரம் கட்சிகள் பொய் வாக்குறுதிகளை கொடுத்தாலும் ஆயிரம் விளக்கு தொகுதியில் வெற்றி பெறப்போவது குஷ்பூ தான் என அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.பாரதி சொல்லிற் கினங்க பெண்கள் நாட்டின் கண்கள் என குஷ்பூ போல பல பெண்கள் நிருபித்துக் காட்டி வருகின்றனர்.

அதற்கு சிறந்த உதாரணமாக அதிமுக மறைந்த முன்னால் முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா அவர்களை கூறலாம்.குஷ்பூ அவர்கள் ஆயிரம் விளக்கு தொகுதியில் வெற்றிபெற காரணம்,ஜெயலலிதா அம்மாவை போல நானும் அவமானம் படுத்தப்பட்டேன் என ஓபன் ஸ்டேட்மெண்ட் கொடுத்ததுதான்.நான் திமுகவிலிருந்த போது என் முந்தானையை பிடித்து இழுத்தார்கள்,வீட்டில் என் பெண் பிள்ளைகள் இருக்கும் போது கல் எறிந்தார்கள்.என இவ்வாறு அவர் கூறியது,திமுகவின் பிரகாச விளக்கு ஆயிரம் விளக்கு தொகுதியில் அணைந்து விட்டது.

குஷ்பூ வின் விளக்கு பிரகாசமாக எறிய ஆரம்பத்துவிட்டது.தற்போது ஆயிரம் விளக்கு தொகுதியில் குஷ்பூவிற்கு அதிக அளவு ஆதரவு கொடுத்து வருகின்றனர்.அவரக்கு அளிக்கும் ஆதரவை பார்த்து பாஜகவினர் மகிழ்ச்சி வெள்ளத்தில் உள்ளனர்.குஷ்பூ வீடு வீடாக  சென்ற வாக்கு கேட்பது அவருக்கு கூடுதல் பலத்தை தந்துள்ளது.இவருடன் சேர்ந்து அவரது கணவரும் தன் மனைவிக்கு வாக்கு போடும் படி கேட்டு வருகிறார்.17 ஆண்டுகாலமாக திமுக தலைவர் சட்டமன்ற உறுப்பினராக இருந்துள்ளார் என்றால்,அவர் எப்படி இத்தொகுதியை வைத்திருக்க வேண்டும்.ஆனால் இத்தொகுதியில் மக்களுக்கு அடிப்படி வாசிகளை கூட செய்து தரவில்லை.சுயனாலமான கட்சி தான் திமுக என சளைக்காமல் கூறி வருகிறார்.

வீட வீடாக சென்ற வாக்கு கேட்கும் பொது அவர்கூறும் கோரிக்கைகளை கேட்டுக்கொண்டு குஷ்பூ கூறுவது,நான் மற்ற அரசியல்வாதிகள் போல அல்ல சொன்ன சொல்லை காப்பாற்றுவேன் என வாக்குறுதி கொடுத்தார்.அதுமட்டுமின்றி கருணாநிதி அவர்கள் வளர்த்த மரத்தின் நிழலில் காற்று வாங்கிக்கொண்டுயிருப்பது தான் ஸ்டாலின்.தலைவராக ஸ்டாலின் சாதித்தது என்ன.திமுகவினரால் பட்டியளிட முடியும்மா என்று சரமாரியாக கேள்விகளை எழுப்பினார்.தொடர்ந்து நல்லாட்சி வர அதிமுக கூட்டணியில் தாமரைக்கு வாக்களியுங்கள் என்றார்.