நவரச நாயகன் கார்த்திக்கின் அறுபதாவது பிறந்த நாளை முன்னிட்டு வாழ்த்து கூறிய நடிகை குஷ்பு தனது ப்ரொபைல் பிக்சரை மாற்றி தான் வருஷம் 16 படத்தையும் நடிகர் கார்த்திக்யும் மறக்கவில்லை என்று நினைவூட்டி உள்ளார்.
நடிகை குஷ்பு தமிழ் சினிமாவில் 1988 ஆம் ஆண்டு தர்மத்தின் தலைவன் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். இதில் இவர் இரண்டாவது ஹீரோயினாக நடித்திருந்தார்.
1989 ஆம் ஆண்டு வெளியான வருஷம் பதினாறு படத்தில் ஹீரோயினாக நவரச நாயகன் கார்த்திக் உடன் நடித்திருந்தார். இதுவே ஹீரோயினாக குஷ்புவிற்கு முதல் படம் .
குஷ்புவும் கார்த்திக்கும் இணைந்து வருஷம்16 ,கிழக்குவாசல், உன்னிடத்தில்என்னைகொடுத்தேன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளனர்.நடிகர் கார்த்தியின் அறுபதாவது பிறந்த நாளை முன்னிட்டு தனது ட்விட்டர் பக்கத்தில் பிக்சரை வருஷம் 16 படத்தின் புகைப்படத்தை கொண்டு மாற்றியுள்ளார். இச்செயல் நவரச நாயகனின் ரசிகர்களை குஷி படுத்தியுள்ளது.