பொம்மை என நினைத்து விளையாடிய குழந்தைகள்! பின் நடந்த அவலம்!
குழந்தைகள் விளையாடும் விளையாட்டு பொருளில் இப்படி ஒரு விபரீதம் தேவையா? யாராக இருந்தாலும் ஒரு மனசாட்சி வேண்டாமா? இப்படி ஒரு காரியத்தை செய்து இருந்தால் அவர்கள் எப்படி ஒரு கல்நெஞ்சகாரர்களாக இருப்பார்கள். பாகிஸ்தான் நாட்டில் வடமேற்கே கைபர் துவா என்ற மாகாணத்தில், டேங்க் என்ற மாவட்டத்தில், மெஹ்சுத் கெரூனா என்ற பகுதியில் குழந்தைகள் தங்களது வீட்டின் அருகே விளையாடிக் கொண்டு இருந்தனர்.
அப்போது அங்கே ஒரு பொம்மை போன்ற ஒரு பொருள் இருந்துள்ளது. இதனை கண்ட குழந்தைகள் ஆர்வமிகுதியால் அதனை எடுத்து விளையாடி உள்ளனர். ஆனால் அந்த பொம்மை போன்று இருந்த பொருளில் வெடிகுண்டு வைத்து அந்த தெருவில் வைத்துள்ளனர்.
இது தெரியாமல் குழந்தைகள் அந்த வெடிகுண்டு போன்ற பொருளை வைத்து விளையாடி, அதன் காரணமாக, பொம்மை வெடிகுண்டு திடீரென வெடித்தது. இந்த சம்பவத்தில் மூன்று குழந்தைகளும் அங்கேயே உயிரிழந்தனர். மேலும் அவர்கள் அனைவரும் 5 முதல் 12 வயதுக்குட்பட்ட குழந்தைகள் என்பது மிகவும் துயரமான விஷயமாக உள்ளது.
ஆனால் இந்த சம்பவத்திற்கு எந்த ஒரு பயங்கரவாத அமைப்பும் இதுவரை பொறுப்பேற்கவில்லை. இது குறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்