மீண்டும் இயக்குனர் ஆகும் எஸ் ஜே சூர்யா… 50 கோடி ரூபாய் பட்ஜெட்டில் பேன் இந்தியா திரைப்படம்!

0
170

மீண்டும் இயக்குனர் ஆகும் எஸ் ஜே சூர்யா… 50 கோடி ரூபாய் பட்ஜெட்டில் பேன் இந்தியா திரைப்படம்!

இயக்குனர் எஸ் ஜே சூர்யா இசை படத்துக்குப் பிறகு மீண்டும் ஒரு படத்தை இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழ் சினிமாவில் பாரதிராஜா, வசந்த் ஆகியோருக்கு உதவி இயக்குனராக பணியாற்றிய எஸ் ஜே சூர்யா, அஜித் நடித்த வாலி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். அதையடுத்து அவர் இயக்கிய குஷி திரைப்படமும் வெற்றிப் படமாக அமைந்தது.

அதன் பின்னர் அவர் நியூ என்ற படத்தை இயக்கி அதில் கதாநாயகனாகவும் நடித்தார். அதன் பின்னர் அவர் பிற நடிகர்களை இயக்கவே இல்லை. நடிப்பில் பிஸி ஆன அவர் அன்பே ஆருயிரே மற்றும் இசை ஆகிய படங்களில் நடித்து இயக்கினார்.

இதற்கிடையில் இறைவி, மெர்சல் மற்றும் மாநாடு போன்ற படங்களில் நடித்து ஒரு நடிகராக தன்னை நிலைநிறுத்திக் கொண்டார். தொடர்ந்து படங்களில் நடித்து வரும் இப்போது மார்க் ஆண்டனி மற்றும் வாரிசு ஆகிய படங்களில் நடிக்கிறார். இந்நிலையில் இப்போது அவர் மீண்டும் ஒரு படத்தை இயக்க ஆயத்தம் ஆகி வருகிறார்.

 இந்த படத்தை அவர் 50 கோடி ரூபாய் செலவில் இயக்கி நடிக்க உள்ளாராம். இதற்காக இந்தியாவின் பல மொழிகளில் இருந்தும் நடிகர்களை தேர்வு செய்துள்ள அவர், இந்த படத்துக்காக வெளிநாட்டுக் கார் ஒன்றையும் இறக்குமதி செய்து அதில் பல மாறுதல்களை செய்துவருகிறாராம். இந்த படத்துக்கு கில்லர் என்று தலைப்பு வைத்துள்ளாராம். விரைவில் இந்த படம் தொடங்கும் என சொல்லப்படுகிறது.

Previous article500 கோடி ரூபாய் பட்ஜெட்டில் ராமாயணம் படமாக்கப்படுவது உறுதி… பிரபல நடிகர் தகவல்!
Next articleசீறிய வேகப்பந்து வீச்சாளர்கள்.. பதுங்கிய ஸ்பின்னர்கள்… இந்திய அணிக்கு 160 ரன்கள் இலக்கு கொடுத்த பாகிஸ்தான்!