கொழுப்பு கட்டி கரைந்து உடல் எடை குறைய வேண்டுமா? உயிர் கொடுக்கும் உயிர்வேலி கிளுவை..!!

Photo of author

By Priya

kiluvai tree benefits in tamil: இன்றளவும் பல கிராமங்களில் இந்த கிளுவை மரத்தின் வேலி வீட்டின் முன்பு வைக்கப்பட்டிருக்கும். இந்த கிளுவை மரத்தின் (Commiphora berryi) மருத்துவ பயன்கள் சொன்னால் யாரும் நம்ப மாட்டார்கள். ஏதோ வேலி அமைப்பதற்கு அந்த காலத்தில் இந்த மரத்தின் குச்சியில் வைத்து வேலி அமைத்தார்கள். இதில் என்ன மருத்துவ குணம் இருக்க போகிறது என யோசிக்க தோணும். இந்த கிளுவை மரத்தின் காற்று நமது உடலில் பட்டாலே நல்லது என்பதற்காக தான் அந்த காலத்தில் வீட்டின் முன்பு, வயல்வெளிகளில் வேலியாக அமைத்து வைத்தனர். இதன் காற்று நமக்கு அவ்வளவு மருத்துவ குணம் வாய்ந்தது. அதனால் தான் இதனை உயிர் வேலி எனவும் கூறுவார்கள்.

அந்தக்காலத்தில் இந்த குச்சியை உடைத்து தான் பல் துலக்குவார்கள். இந்த கிளுவை மரத்தின் (kiluvai maram) மருத்துவ பயன்கள் ஏராளம். அதனை பற்றி இந்த பதிவில் காண்போம்.

கிளுவை மரத்தின் பயன்கள்

தற்போது அனைவருக்கும் மிகப்பெரிய பிரச்சனையாக இருப்பது கொழுப்பு கட்டி இந்த கிளுவை மரத்தின் கீரையை பறித்து சமைத்து சாப்பிட்டு வர கொழுப்புக்கட்டி நீங்கிவிடும்.

அரைத்து அதனை கட்டிகள் உள்ள இடத்தில் பற்று போட கொழிப்பு கட்டிகளின் மீது தடவ கட்டிகள் உடைந்து சீ்க்கிரம் குணமாகிவிடும்.

இந்த கிளுவை குச்சியை உடைத்து பல் துலக்கி வந்தால் பற்கள் உறுதி பெறுகிறது. பற்களில் இரத்தம் கசிவது குணமாகும்.

இலைகளை பறித்து கசாயம் வைத்து குடித்து வர கல்லீரலில் உள்ள கழிவுகள் அனைத்தும் வெளியேறி விடும். ஈரல் சம்பந்தப்பட்ட நோய்களுக்கு சிறந்த மருந்தாக இது விளங்குகிறது.

மேலும் இந்த கிளுவ மரத்தில் இருந்து பிசின் ஒன்று உருவாகும். அந்த பிசினை எடுத்து காயவைத்து வெதுவெதுப்பான நீரில் காய்ச்சி பருகி வர உடல்  எடை குறையும்.

இலைகளை பறித்து கசாயம் வைத்து குடித்து வர கல்லீரலில் உள்ள கழிவுகள் அனைத்தும் வெளியேறி விடும். ஈரல் சம்பந்தப்பட்ட நோய்களுக்கு சிறந்த மருந்தாக இது விளங்குகிறது.

கிளுவை கீரைகளை கொதிக்க வைத்து எலுமிச்சை பழம் கலந்து குடித்து வந்தால் தீராத வயிற்று வலி தீர்ந்துவிடும்.

காலையில் வெறும் வயிற்றில் கசாயம் வைத்து குடித்து வந்தால் தேவையற்ற கொழுப்பை கரைத்து உடல் எடையை குறைக்கிறது. வயிற்று உப்புசம் போன்ற பிரச்சனையை குறைக்கிறது. மலச்சிக்கலை கட்டுப்படுத்துகிறது.

மேலும் படிக்க: இந்த பழத்தை எங்கு பார்த்தாலும் விடாதீங்க..!! மலச்சிக்கல் முதல் அனைத்து வயிற்று பிரச்சனைக்கும் தீர்வு..!!