வெறும் வயிற்றில் 4 கிராம்பு சாப்பிடுவதால் உங்கள் உடம்பில் நடக்கும் அதிசியம்!

Photo of author

By Kowsalya

வெறும் வயிற்றில் தினமும் 4 கிராம்பு சாப்பிட்டு வந்து பாருங்கள், நீங்களே மாற்றத்தை உணர்வீர்கள், இந்த கிராம்பு மரத்திலிருந்து கிடைக்கிறது. அரிசி தயாரிப்புகள், கறிகள், பேக்கரி பொருட்கள், சூப்கள், மற்றும் இறைச்சி என அனைத்து சமையலுக்கு பயன்படுத்தப்படும் ஒரு மசாலா என்று சொல்லலாம். இது மிகவும் நறுமணம் உடையது.

நீரிழிவு:

இந்த கிராம்பை தினமும் 5 எடுத்து வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்தலாம். மேலும், கிராம்பு எண்ணெய் ஒரு வலி நிவாரணி, செரிமான பிரச்சனைகளை சரிசெய்யும். மற்றும் சுவாச பிரச்சினை நீங்க பயன்படும். கிராம்பு மரத்தின் காய்ந்த பூ மொட்டுகள், தண்டுகள் மற்றும் இலைகள் போன்ற பல்வேறு பாகங்கள் ஆயுர்வேத மருந்துகளில் பயன்படுத்தப்படுகின்றன.

கிராம்பில் யூஜெனால் என்ற மருத்துவ பண்பு உள்ளது, இது நோய் எதிர்ப்பு தன்மை மற்றும் ஆக்ஸிஜனேற்ற பண்புகளைக் கொண்டுள்ளது, இது மூட்டுவலி போன்ற நோய்களால் ஏற்படும் வீக்கத்தைக் கட்டுப்படுத்த உதவுகிறது. மேலும் இது இதய நோய், நீரிழிவு, புற்றுநோய் போன்ற அபாயங்களைக் குறைக்க உதவுகிறது.

பல அற்புதமான பண்புகளுடன் உள்ள இந்த் கிராம்பை தினமும் வெறும் வயிற்றில் மென்று சாப்பிடுவது பல நோய்களின் அபாயத்தைக் குறைக்கும், மேலும் உங்கள் பல் ஆரோக்கியத்தை காக்கும். உங்கள் செரிமானத்தை அதிகரிக்கும்.

வெறும் வயிற்றில் கிராம்புகளை மென்று சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்:

கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது: “உலர்ந்த கிராம்பை சாப்பிடும் பொழுது கல்லீரலின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. இந்த கிராம்பு புதிய உயிரணு வளர்ச்சியை ஊக்குவித்து கல்லீரலை பாதுகாக்கிறது,

இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்துகிறது: வெறும் வயிற்றில் ஒரு சிட்டிகை கிராம்பு பொடியை உட்கொள்வது நீரிழிவு நோயாளிகளின் இரத்த சர்க்கரை அளவை குறைக்கிறது. கிராம்பை சாப்பிட்டு வருவதன் மூலம் ரத்தத்தின் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தி இன்சுலின் சுரப்பதையும் கட்டுப்படுத்துகிறது.

காலையில் பித்தம் மூலம் குமட்டல் மயக்கத்தால் அவதிப்படுபவர்கள், வெறும் வயிற்றில் கிராம்புகளை மென்று தின்பதால், அவற்றினால் ஏற்படும் மயக்கம் குணமாகும். கிராம்பு உமிழ்நீருடன் கலக்கும் போது, ​​குமட்டல் தொடர்பான அறிகுறிகளைக் குறைக்க உதவும் சில நொதிகள் உற்பத்தியாகின்றன என மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

பல் வலி நிவாரணியாக கிராம்பு காலங்காலமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. வலி-நிவாரண பண்புகளுடன், இது வாய்வழி அழற்சி, பிளேக், ஈறு அழற்சி மற்றும் வாய் துர்நாற்றத்தை எதிர்த்துப் போராட உதவுகிறது.

கிராம்புகள் சுவாசத்தை புத்துணர்ச்சியடையச் செய்கின்றன. அவற்றின் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் நாள் முழுவதும் சிறந்த வாய் ஆரோக்கியத்தையும் சுகாதாரத்தையும் உறுதி செய்கின்றன. அவை பிளேக் உருவாவதையும் தடுக்கின்றன.

கிராம்புகளில் மாங்கனீஸ் மற்றும் ஃபிளாவனாய்டுகள் போன்ற கூறுகள் உள்ளன, அவை எலும்பை பராமரிக்க உதவும். இந்த கூறுகள் எலும்பு திசுக்களை சரிசெய்ய உதவுகின்றன, இதனால் மூட்டு வலியைக் குறைக்கிறது மற்றும் வலி வராமல் தடுக்கிறது, அதே நேரத்தில் வயதானவர்களில் தசைகள் தேய்வதை தாமதப்படுத்துகிறது.

காலையில் கிராம்பை முதலில் மென்று சாப்பிடுவது உமிழ்நீர் உற்பத்தியை அதிகரிக்கிறது, இது நாளின் தொடக்கத்தில் செரிமானத்திற்கு சரியான பாதையை அமைக்கிறது. மேலும் இது மலச்சிக்கலைக் குறைப்பதோடு, குமட்டல் மற்றும் அமிலத்தன்மையைக் குறைக்கவும் கிராம்பு உதவுகிறது.

கிராம்புக்கு வலி நிவாரணி பண்புகளை அளிக்கிறது. கிராம்புகளை வெறும் வயிற்றில் தொடர்ந்து உட்கொள்வது மூலம் ஒற்றைத் தலைவலி மற்றும் தலைவலியைக் குறைக்க உதவுகிறது. கிராம்பை ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான பாலில் ஒரு சிட்டிகை கல் உப்பை கலந்து தூள் வடிவிலும் உட்கொள்ளலாம்.