திமுகவின் முன்னாள் முதலமைச்சர்கள் சி என் அண்ணாதுரை மற்றும் கருணாநிதி மற்றும் தற்போதைய முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளிட்டோர் தொடர்பாக இணையதள பிரபலமாகவும், அதே சமயத்தில் அரசியல் விமர்சகராகவும், இருந்து வரும் கிஷோர் கே ஸ்வாமி அவதூறாக பதிவிட்டதால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல விதமான புகார்கள் எழுந்தன.
இதனைத் தொடர்ந்து அவரை கைது செய்த காவல்துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி அவரை பதினைந்து நாள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர்.
இந்த சூழ்நிலையில், பெண் பத்திரிக்கையாளர் ஒருவர் தொடர்பாக அவதூறாக பேசினார் என்று அவர் மீது மீண்டும் வழக்கு பதிவு செய்யப்பட்டு அவர் மறுபடியும் கைது செய்யப்பட்டார். அதோடு தலைவர்களை அவதூறாக பேசினார் என்று அவர் மீது மீண்டும் மூன்று புகார்கள் தற்சமயம் வரையில் எழுத்துப்பூர்வமாக பெறப்பட்ட சூழ்நிலையில், அவர் சர்ச்சைக்குரிய விதமாக உரையாற்றிய விவகாரங்களின் அடிப்படையில் குண்டர் சட்டம் அவர் மீது போடப்பட்டு இருக்கிறது.
அவர் மீது காவல் நிலையத்தில் கொடுக்கப்பட்ட பல மிரட்டல் மற்றும் பெண்களை இழிவாகப் பேசுதல் குறித்த வழக்குகள் மீண்டும் கையில் எடுக்கப் பட்டு குண்டர் சட்டம் அவர் மீது போடப்பட்டு இருக்கிறது என்று தெரிவிக்கப்படுகிறது.