அந்தர் பல்டி அடிக்கும் கு.க.செல்வம்: மீண்டும் திமுகவிற்கு திரும்பகிறார்?

Photo of author

By Parthipan K

பாஜகவினரை சந்தித்தது முதல் அவர்களுடன் சேர்ந்து அறிக்கை வெளியிட்டு, திமுகவில் அதிருப்தி  அடைந்ததாகவும், கட்சியில் இருந்து என்னை தூக்கினாலும் கவலைப்பட மாட்டேன் என கு.க. செல்வம் கூறிவந்தார்.

இந்த நிலையில், அண்மையில் திமுகவின் தலைமை கு.க செல்வத்தை சஸ்பெண்ட் செய்ததோடு, பாஜகவினரைச் சந்தித்ததற்கானா விளக்கம் கேட்டு திமுக தலைமை நோட்டீஸ் அனுப்பியிருந்தது.

இதற்கு பதில் அளித்த கு.க செல்வம், “தாங்கள் அனுப்பியிருந்த நோட்டீஸில் எந்த விவரங்களும் இல்லை, மேலும் நான் இதில் என்ன பொய்யான தகவலைச் சொல்லி இருந்தேன்? திமுகவின் கட்சியினரோ, கட்சியின் உறுப்பினர்களோ வேறு எந்த கட்சியின் நபர்களை சந்திக்க கூடாது என எங்கும் குறிப்பிடவில்லை”

மேலும் “கருணாநிதியையே பாஜகவைச் சேர்ந்த மோடி அவர்கள் சந்தித்திருந்தார், எனவே கட்சியின் மாண்பினை நான் மீறி உள்ளேன் எனக் கூறுவது சரியில்லை, இது இயற்கைக்கு மாறான கருத்தாகும். எனவே என் மீது கட்சி வைத்துள்ள குற்றச்சாட்டு நோட்டீஸினைத் திரும்பப் பெறுமாறும், நான் அறிக்கையில் குறிப்பிட்டுள்ள படி விவரங்களைக் கொடுத்தால் விசாரணைக்கு ஒத்துழைக்க இருப்பதாகவும்” அதிருப்தி எம்எல்ஏ கு.க செல்வம் குறிப்பிட்டுள்ளார்.