ஸ்ரேயஸ் ஐயரை முதலாவதாக தக்க வைக்க தயங்குகிறதா KKR!! கேப்டன்சியில் மாற்றம் ஏற்படுமா??

Photo of author

By Vijay

ஸ்ரேயஸ் ஐயரை முதலாவதாக தக்க வைக்க தயங்குகிறதா KKR!! கேப்டன்சியில் மாற்றம் ஏற்படுமா??

Vijay

KKR reluctant to retain Shreyas Iyer first

Shreyas iyar: வருகின்ற 2025 ipl போட்டியில் ஷ்ரேயஸ் ஐயரை தக்க வைக்க தயங்குகிறது KKR அணி நிர்வாகம். அவரது கேப்டன்சியில் மாற்றம் ஏற்படுமா?

இந்திய அணியில் மிகவும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த கூடிய வீரர்களில் ஒருவர் ஸ்ரேயாஸ் ஐயர். இவர் ஆட்டத்தில் வரிசையில் நடுவரிசை 3 அல்லது 4 வதாக களமிறங்குவார். ஆனால் இவருக்கு அடிக்கடி காயம் ஏற்படும் காரணம் மற்றும் இவரின் சீரற்ற ஆட்டம் காரணமாக இந்திய அணியில் இவரின் இடம் கேள்வி குறியாகியுள்ளது. தற்போதைக்கு இவருக்கு இந்திய அணியில் ஒரு நாள் போட்டிகளுக்கு மட்டும் வாய்ப்பு கிடைத்து வருகிறது.

இந்த நிலையில் கடந்த ஆண்டு ஐ பி எல் சீசனில் மிகவும் சிறப்பாக விளையாடி ஸ்ரேயஸ் ஐயர் தலைமையிலான KKR அணி கோப்பையை இரண்டாவது முறையாக தட்டி சென்றது. கொப்பியை வெற்றி பெற்ற போதிலும் அவர் அணிக்கு பெரிதாக பங்களிக்கவில்லை. எந்த போட்டிகளிலும் சரியான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை.

ஆனால் அடுத்த மாதம் நடக்க விருக்கும் ஐ பி எல் மெகா ஏலத்துக்கான தக்கவைக்கப்பட்ட பட்டியலில் முதலாவதாக ஸ்ரேயாஸ் ஐயரை தக்க வைக்க KKR அணி தயங்குகிறதாம்.

அந்த அணியில் முதலாவதாக ஆண்ட்ரே ரஸ்ஸல் மற்றும் சுனில் நரைனை முதல் இரண்டு வீரர்களாக 18 கோடிக்கும், மூன்றாவது வீரராக ஸ்ரேயாஸ் ஐயரை 11 கோடிக்கும் தக்க வைக்க விரும்புவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கு அவர் ஒப்புக் கொள்ளவில்லை என்றால் அவரிடம் இருந்து கேப்டன்சியை மாற்றவும் தயாராக உள்ளதாக கூறப்படுகிறது.