ஆடை தயாரிப்பு நிறுவனங்களுக்கு ஐந்து மாதத்திற்கு பிறகு மீண்டும் ஏற்றுமதி ஆர்டர் வர தொடங்கியுள்ளது. இதனால் பின்னலாடை ஏற்றுமதியாளர்கள் உற்சாகம் அடைந்து தங்கள் பணியை ஆர்வத்துடன் செய்து வருகின்றனர்.
திருப்பூர் மாவட்டத்திற்கு இணையாக ஈரோடு மாவட்டத்திலும் அனைத்து வகையான ஆயத்த ஆடைகளும் உற்பத்தி செய்யப்படுகின்றன.
ஈரோடு நகரம், பெருந்துறை, சென்னிமலை, சத்தியமங்கலம், அந்தியூர் போன்றபகுதிகளில் சிறியது முதல் பெரியது வரை 200-க்கும் மேற்பட்ட ஆயத்த ஆடை நிறுவனம் செயல்பட்டு வருகிறது.
இந்த நிறுவனங்கள் ஜனவரி பிப்ரவரி மார்ச் மாதங்களில் அமெரிக்கா, தாய்லாந்து, பிரிட்டன் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து சுமார் ரூபாய் 200 கோடி அளவிற்கு ஏற்றுமதி ஆர்டர்களை எடுத்து இருந்தன.
அதன்பிறகு கொரோனாவில் காரணமாக கடந்த 5 மாதங்களாக பணிகள் முழுவதுமாக முடங்கின. இதனால் ரூ. 700 கோடி மதிப்பிலான ஏற்றுமதி ஆர்டர்கள் ரத்தானது. அதைத் தவிர ரூ.100 கோடி அளவிலான ஏற்றுமதி ஆடல்களும் கடந்த ஐந்து மாதங்கள் ரத்தான இதனால் ஏற்றுமதியாளர்களுக்கு சும்மாய் ரூ. 700 கோடி அளவிற்கு வர்த்தகம் பாதிக்கப்பட்டன.
ஆனால் தற்போது நிலைமை கொஞ்சம் மாறியுள்ளதால், ஜூன் கடைசி வாரத்திலிருந்து புதிய ஆர்டர்கள் வரத் தொடங்கியுள்ளன. இந்த ஆடைகள் அனைத்தும் இந்த மாதம் முதல் வாரத்தில் இறுதி செய்யப்பட்டு உற்பத்தி தொடங்கப்பட்டுள்ளது.
இதன்படி இந்த மாதத்தில் இதுவரை ஏறத்தாழ ரூ. 100 கோடி அளவிற்கு பல்வேறு நாடுகளில் இருந்து ஏற்றுமதி ஆர்டர்கள் கிடைத்துள்ளன.
இதன் மூலம் நிறுவனத்தின் பெயரில் வாங்கியுள்ள வங்கி கடன் தவணையை அடுத்து வரும் மாதங்களில் திரும்பி செலுத்த முடியும் என்று நம்பிக்கை ஏற்பட்டுள்ளது என்ற கருத்து பின்னலாடை பணியாளர்களிடையே ஏற்பட்டுள்ளது.
வெளிமாநில தொழிலாளர்கள் அழைத்து வரவும், நிறுவனங்கள் 24 மணி நேரமும் இயங்கும் அரசு அனுமதி அளிக்க வேண்டும் என்று ஆயத்த ஆடை உற்பத்தியாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்