இந்துக்கள் கடவுள் மீதுள்ள நம்பிக்கையை வெளிப்படுத்தும் விதமாக கை மற்றும் கழுத்தில் கயிறு கட்டுகின்றனர்.சிலர் மன நிம்மதி கிடைக்க சாமி கயிறு கட்டுகின்றனர்.சிலர் நினைத்தது நடக்க காய் மற்றும் கழுத்தில் கயிறு கட்டிக் கொள்கின்றனர்.
இப்பொழுது கோயில்களில் பல வண்ணங்களில் கயிறு வழங்கப்படுகிறது.இதில் சிவப்பு நிறத்தில் இருக்கக் கூடிய கயிறு அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.இந்த சிவப்பு கயிறு மங்களகரமான பொருளாக பார்க்கப்படுகிறது.
இது சிலருக்கு மன ரீதியான நம்பிகையை தருபவையாக திகழ்கிறது.கைகளில் சிவப்பு கயிறு கட்டிக்கொண்டால் கடவுள் அருள் நமக்கு கிடைக்கும் என்பது சிலரது நம்பிக்கை.இப்படி அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படும் சிவப்பு நிற கயிறை சில ராசியினர் கட்டிக் கொள்வது நல்லது அல்ல என்று சாஸ்திரம் சொல்கிறது.
அதாவது மகரம்,கும்பம் மற்றும் மீனம் ஆகிய மூன்று ராசியினர் இந்த சிவப்பு நிற கயிறை அணிந்தால் தீமை தரும் செயல்கள் அதிகமாக நடைபெறும்.இந்த மூன்று ராசியினருக்கு சிவப்பு கயிறு எப்பொழுதும் தீங்கு விளைவிக்க கூடிய ஒன்றாகவே இருக்கும்.
மகரம்,கும்பம் மற்றும் மீன ராசியினர் தங்கள் கை அல்லது கழுத்தில் சிவப்பு நிற கயிறு அணிந்தால் சனி பகவான் கோபத்திற்கு ஆளாக நேரிடும்.இந்த 3 ராசியினர்’சிவப்பு நிற கயிறு அணிவதை முற்றிலும் தவிர்ப்பது நல்லது.
மேலும் மேஷம்,சிம்மம்,விருச்சிகம் ஆகிய மூன்று ராசியில் பிறந்தவர்கள் சிவப்பு நிற கயிற்றை அணிந்தால் அதிக நன்மைகள் உண்டாகும்.இந்த மூன்று ராசியினர் கழுத்து அல்லது கையில் சிவப்பு நிற கயிறு அணிந்தால் வாழ்வில் முன்னேற்றம் ஏற்படும்.உங்களை சுற்றிய எதிர்மறை ஆற்றல் விலகி நேர்மறை ஆற்றல் அதிகரிக்கும் என்று அர்த்தம்.