எவ்வளவு சாப்பிட்டாலும் உடல் எடை ஏறாமல் இருக்க இந்த சீக்ரெட்டை தெரிஞ்சுக்கோங்க!!
இன்றளவில் மக்களுக்கு உள்ள ஒரு பிரச்சனை உடல் பருமன் அதிகமாக இருப்பது தான். இந்த உடல் எடையை குறைக்க மக்கள் இன்றைய காலத்தில் கீட்டே டயட் முறையை பின்பற்றுகிறார்கள்.
குறைந்த கார்போ அளவு, அதிக கொழுப்பு உள்ள இந்த டயட் முறை சிறந்த டயட் முறையாக பல்வேறு ஆய்வுகள் குறிப்பிடப்படுகின்றது.
எடை குறைப்பு, நீரிழிவு, எபிலெப்சி போன்ற குறைபாடுகளுக்கு இந்த டயட் முறை சிறந்த தீர்வாக இருக்கும். சில வகை புற்று நோய்களுக்கும், அல்சைமர் மற்றும் வேறு சில நோய்களுக்கும் இந்த கீட்டோ டயட் நல்ல தீர்வை தருவதாக ஆதாரங்கள் உள்ளது.
இந்த கீட்டோ டயட் முறையில் ஒரு நாளுக்கு 20-50 கிராம் மட்டுமே கார்போ நம் உடலுக்குள் செல்கின்றது. மேலும் பல ஊட்டசத்துக்கள் உள்ள உணவுகள் இந்த டயட்டில் அடங்குகின்றது.
பின்வரும் 15 வகையான உணவுகள் உடல் எடை அதிகரிக்கக் கூடாது என்று நினைப்பவர்கள் எடுத்துக் கொள்ளலாம். இந்த அனைத்து உணவுகளும் கீட்டோ டயட் முறையில் வரும் உணவுகள் ஆகும்.
1. கடல் சார்ந்த உணவுகள்
கடலில் இருந்து கிடைக்கும் உணவுப் பொருள்கள் பெரும்பாலும் கார்போ அளவு குறைந்த உணவு பொருள்கள் ஆகும். மீன் உணவுகள் விட்டமின், மினரல், ஒமேகா 3 போன்ற சத்துக்கள் உள்ள உணவாகும்.
2. குறைந்த கார்போ காய்கறிகள்
காய்கறிகள் ஊட்டச்சத்துகள் அதிகம் உள்ள உணவுகளாகும். ஒரு கப் குறைந்த கார்போ காய்கறிகளில் 1-8 கிராம் கார்போ சத்துக்கள் உள்ளது.
3. சீஸ்
சீஸில் புரதம், நன்மை தரக்கூடிய கொழுப்பு அமிலங்கள், கால்சியம் சத்துக்கள் அதிக அளவு உள்ளது. இருப்பினும் சீஸில் கார்போ சத்துக்கள் குறைந்த அளவுதான் உள்ளது.
4. அவகாடோ
அவகாடோவை தினமும் உண்ணும் பொழுது 2 கிராம் அளவு மட்டுமே கார்போ சத்துக்கள் நம் உடலுக்குள் செல்கிறது. இதில் நார்ச்சத்துக்கள், பொட்டாசியம், இதர ஊட்டச்சத்துக்கள் அதிக அளவில் உள்ளது. அவகாடோ இதய ஆரோக்கியத்திற்கு சிறந்தது.
5. ஆடு மற்றும் கோழிக் கறி
ஆட்டிறைச்சி மற்றும் கோழி இறைச்சியில் கார்போ சத்து சிறிதளவு கூட இல்லை. இதில் புரதம் மற்றும் இதர ஊட்டச் சத்துக்கள் அதிக அளவில் உள்ளது.
6. முட்டை
முட்டையில் 1 கிராமிற்கும் குறைவான அளவே கார்போ உள்ளது. இது நீண்ட நேரம் வயிற்றை பசி எடுக்காமல் வைத்துக் கொள்ளும். முட்டையில் பல்வேறு ஊட்டச்சத்துக்கள் இருப்பதால் கண்கள் மற்றும் இதய ஆரோக்கியத்திற்கு ஏற்ற உணவாகும்.
7. தேங்காய் எண்ணெய்
தேங்காய் எண்ணெயில் கேடொன் உற்பத்தி செய்யும் மூலக்கூறு அதிக அளவு உள்ளது. தேங்காய் எண்ணெய் நம் உடலிலா வளர்சிதை மாற்றத்தை அதிகரிப்பதுடன் உடல் எடையை குறைக்கவும் உதவுகின்றது. தேங்காய் எண்ணெயை உணவில் எடுத்துக் கொண்டால் வயிற்றில் உண்டாகும் கொழுப்பை குறைக்கின்றது.
8. க்ரீக் யோகர்ட் மற்றும் சீஸ்
யோகர்ட் மற்றும் சீஸ் உணவில் கார்போ அளவு 5 கிராம் அளவு மட்டுமே உள்ளது. இந்த உணவுகளை சாப்பிடும் பொழுது நீண்ட நேரம் பசி எடுக்காமல் இருக்க உதவுகின்றது. மேலும் இது வயிறு நிரம்பிய உணர்வை தருவதாக ஆய்வுகள் கூறுகின்றது.
9.நட்ஸ்
இதயம் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்றால் நட்ஸ் உணவுகளை எடுத்துக் கொள்வது அவசியம். வயது முதிர்ந்த காலத்திலும் இவை ஆரோக்கியத்தை தருகின்றது.
10. ஆலிவ் எண்ணெய்
சுத்தமான ஆலிவ் எண்ணெயில் ஆன்டி ஆக்சிடன்ட் அதிக அளவில் இருக்கின்றது. சாலட், மயோனிஸ் போன்றவற்றில் ஆலிவ் எண்ணெயை பயன்படுத்தலாம். மேலும் சமைக்கும் உணவுகளில் ஆலிவ் எண்ணெயை பயன்படுத்தலாம். ஒரு அவுன்ஸ் நட்ஸில் 0.8 கார்போ சத்துகள் உடலுக்கு கிடைக்கின்றது.
11. பெர்ரி
இது ஊட்டச்சத்து நிறைந்த உணவுப் பொருளாக உள்ளது. நோய்கள் வராமல் தடுக்க இவை பெரிதும் உதவியாக இருக்கின்றது. 3.5 அவுன்ஸ் பெர்ரி உண்பதால் வெறும் 5-12 கிராம் அளவு கார்போ உடலுக்கு கிடைக்கின்றது.
12. ஆலிவ்
ஆலிவ் விதைகள் இதயம் மற்றும் எலும்பு ஆரோக்கியத்திற்கு ஏற்ற ஒரு பொருள். ஒரு அவுன்ஸ் ஆலிவ் விதையில் ஒரு கிராம் அளவு கார்போ சத்துகள் மட்டுமே உள்ளது.
13. பட்டர் மற்றும் க்ரீம்
பட்டர் மற்றும் க்ரீமிலும் கார்போ சத்துக்கள் முழுவதுமாக இல்லை. பட்டர் மற்றும் க்ரீமை மிதமான அளவு உட்கொள்ளும் பொழுது இதயத்தின் ஆரோக்கியத்திற்கு ஏற்ற ஒரு உணவு பொருளாக இருக்கும்.
14. டார்க் சாக்லெட்
டார்க் சாக்லெட்டில் ஆன்டி ஆக்சிடன்ட் அதிக அளவு இருக்கின்றது. இதனால் டார்க் சாக்லெட் சாப்பிடும் பொழுது இதய நோய் வராமல் தடுக்கப்படுகிறது. ஒரு அவுன்ஸ் டார்க் சாக்லெட்டில் 3-10 கிராம் கார்போ சத்துக்கள் உள்ளது.
15. இனிப்பு இல்லாத டீ மற்றும் காபி
இனிப்பு இல்லாத டீ மற்றும் காபியிலும் கார்போ சத்துக்கள் சுத்தமாக இல்லை. இனிப்பு இல்லாத டீ மற்றும் காபி நம் உடலில் வளர்சிதை மாற்றங்களை ஏற்படுத்துகின்றது. இனிப்பு இல்லாமல் டீ மற்றும் காபி குடிப்பது உடலுக்கும் மனதிற்கும் புத்துணர்ச்சியை தருகின்றது. இனிப்பு இல்லாமல் டீ மற்றும்காபி குடிப்பதால் சர்க்கரை நோயிக்கான பயமும் ஏற்படுவது இல்லை.