இனிமே சிம் கார்ட் வாங்கும்போது இதை தெரிந்து கொண்டு வாங்குங்கள்!!
ஒருவர் சிம் கார்ட் வாங்க வேண்டும் என்றால் தன்னுடைய அடையாள சான்றுகளை காட்டியோ அல்லது கை ரேகை வைத்து தான் வாங்க முடியும். ஆனால் சிலர் இப்படி இல்லாமல் போலி சிம் கார்டை வாங்குகிறார்கள்.
இவ்வாறு போலி சிம் கார்ட் வாங்கும் முறையை தடுப்பதற்காக டிஜிட்டல் வசதி ஒன்றை கொண்டு வந்துள்ளனர். அதாவது நம் சிம் கார்டு வாங்க வேண்டுமென்றால் நாம் நேரில் சென்று நம்மை அவர்கள் புகைப்படம் எடுத்து நம் கைரேகையை வைக்க வேண்டும்.
இந்த முறை போலி சிம் கார்ட் வாங்குவதை தடுப்பதற்காக கொண்டுவரப்பட்டது. ஆனால் இதிலும் சில தப்புகள் நடக்கிறது. அதாவது நாம் சிம்கார்டு வாங்கும் பொழுது கைரேகை வைப்போம் அப்போது கை ரேகை பதியவில்லை என்று இரண்டாம் முறை வைக்க சொல்வார்கள் அப்படி நாம் செய்யும்போது இரண்டு முறை கை ரேகை பதியும்.
ஒரு கைரேகை வைத்து நமக்கு சிம் கார்டு கொடுத்துவிட்டு மற்றொரு கைரேகை வைத்து போலி சிம் கார்டை மற்றொருவருக்கு விற்று விடுகிறார்கள். இதே போல் புகைப்படம் எடுக்கும் போதும் புகைப்படம் சரியாக விழவில்லை என்று திரும்ப எடுக்கிறார்கள்.
இதெல்லாம் போலி சிம் கார்டை மற்றொருவருக்கு வழங்குவதற்காக செய்யக்கூடிய விஷயமாகும். எனவே சிம்கார்டு வாங்கும் போது இது போன்ற தவறுகள் நடக்காமல் நாம் அனைவரும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.