மேட்டூர் அணையில் தெரிந்த கோபுரம்!

0
175

மேட்டூர் அணையின் நீர்மட்டம் மொத்தம் 120 அடி. கர்நாடகாவில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் மேட்டூர் அணையின் மூலம் சேகரிக்கப்பட்டு அங்குள்ள டெல்டா பகுதி விவசாயிகளுக்கு பாசனத்திற்காக நீர் திறந்துவிடப்படும்.

 

இந்நிலையில் வினாடிக்கு 4934 கன அடி நீர் வந்த நிலையிலும் பாசனத்திற்காக நீர் திறந்து விடப்பட்டதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் குறைந்து வருகிறது.

 

மேட்டூர் அணையின் நீர்மட்டம் சரிந்ததால் ஆலய கோபுரம் வெளியே வந்தது. சேலம் மாவட்டத்திலுள்ள மேட்டூர் அணையின் மொத்த நீர்மட்டம் 120 அடியாக இருந்தது. நீர்மட்டம் 78 அடிக்கு கீழ் சரியும் பொழுதும் பண்ணவாடி பகுதியில் மூழ்கிய ஆலய கோபுர முகப்பு வெளியே தெரியும். இப்பொழுது மேட்டூர் அணையின் நீர்மட்டம் 71.5 அடியாக சரிந்ததால் கோபுரத்தின் மேல்மட்டம் 7 அடி உயரம் வரை வெளியே தெரிந்தது.

 

பாசனத்திற்காக வரும் நாட்களில் அணையில் இருந்து நீர் திறந்து விடப்பட்டால், மேலும் அணையின் நீர்மட்டம் சரியும் என்று சொல்லப்படுகிறது.

 

 

Previous articleதிமுக ஆட்சிக்கு வர காரணமாக இருந்த அரசு ஊழியர்களாலேயே நடத்தப்படும் போராட்டம்! முதலமைச்சர் ஸ்டாலின் அதிர்ச்சி!
Next article3 வது அலையை பற்றி திடுக்கிடும் தகவல்! எய்ம்ஸ் வெளியிட்ட அறிவிப்பு!