சமீபத்தில் நடைபெற்ற தமிழக சட்டசபை பொதுத் தேர்தலில் பெரும்பான்மை இடங்களில் திமுக வெற்றி பெற்றதைத் தொடர்ந்து அந்த கட்சி ஆட்சியில் அமர்ந்தது இந்தநிலையில், கொடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கு உள்ளிட்டவற்றை மீண்டும் தோண்ட தொடங்கியிருக்கிறது தமிழக அரசு கொடநாடு வழக்கில் தொடர்புடையவர் என கருதப்பட்டு வரும் கனகராஜ் கொடநாடு சம்பவம் நடைபெற்ற ஒரு சில நாட்களில் சேலம் அருகே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த சமயத்தில் கார் மோதி பலியானார்.
அவர் விபத்தில் உயிரிழிந்தாரா அல்லது அது திட்டமிட்ட படுகொலை சம்பவமா என்று காவல்துறையினர் மறுபடியும் விசாரணையை ஆரம்பித்திருக்கிறார்கள் ஆத்தூர் காவல்துறை துணை கண்காணிப்பாளர் ராமச்சந்திரன் தலைமையிலான காவல்துறையினர் 22 தேதி கனகராஜ் உறவினர் ரமேஷ் உள்ளிட்டோரின் வீட்டிற்கு சென்று விசாரணை செய்தார்கள்.
இதனை தொடர்ந்து வடநாடு வழக்கு குறித்த தடயங்களை அழித்ததாகதெரிவித்து சேலம் மாவட்டம் எடப்பாடியை சேர்ந்த கனகராஜ் சகோதரர் தனபால் மற்றும் அவருடைய உறவினரான ரமேஷ் உள்ளிட்டோரை காவல்துறையினர் கைது செய்தார்கள்.
இந்த நிலையில், எடப்பாடி பழனிச்சாமியின் சகோதரர் தனபால் அவர்களிடம் கூடுதல் விசாரணை நடத்த வேண்டும் என்ற காரணத்தால், அவரை 10 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வேண்டும் என்று தெரிவித்து நேற்று முன்தினம் தனிப்படை காவல்துறையினர் மாவட்ட நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்கள். காவல் துறையினரின் கருத்தை ஏற்றுக்கொண்டு நீதிபதி சஞ்சய் பாபா 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கி உத்தரவிட்டார்.