கொடைக்கானல் மலர் கண்காட்சி!! மேலும் இரண்டு நாட்கள் நீட்டிப்பு!!

Photo of author

By Sakthi

கொடைக்கானல் மலர் கண்காட்சி!! மேலும் இரண்டு நாட்கள் நீட்டிப்பு!!
கொடைக்கானலில் நடைபெற்று வரும் மலர் கண்காட்சி மேலும் இரண்டு நாட்களுக்கு நடக்கும் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் நடைபெற்று வரும் 60வது மலர் கண்காட்சி இன்றுடன் முடியவிருந்த நிலையில் மேலும் இரண்டு நாட்கள் நீட்டிக்கப்படுவதாக தோட்டக்கலைத் துறை துணை இயக்குநர் பெருமாள் சாமி அவர்கள் கூறியுள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம் பிரையண்ட் பூங்காவில் மே 26ம் தேதி மலர் கண்காட்சி தொடங்கியது. மே 26ம் தேதி தொடங்கும் மலர் கண்காட்சி மூன்று நாட்கள் நடக்கும் என்று அறிவிக்கப்பட்டது. இதையடுத்து பல்வேறு வகையான மலர்களை சுற்றுலாப் பயணிகள் பலரும் கண்டு ரசித்தனர்.
இந்த நிலையில் பள்ளிகளுக்கான கோடை விடுமுறை நீட்டிக்கபடுவதாக தமிழக பள்ளிக் கல்வித்துறை அறிவித்ததை அடுத்து இன்றும் நாளையும் என மேலும் இரண்டு நாட்களுக்கு கொடைக்கானல் மலர் கண்காட்சி நீட்டிக்கப்படும் என்று தோட்டக்கலைத் துறை துணை இயக்குநர் பெருமாள் சாமி அறிவித்துள்ளார்.