கோடநாடு கொலை கொள்ளை வழக்கு.. EPS க்கு நெருங்கும் சிக்கல்!! இனி தப்பிக்கவே முடியாது!!

Photo of author

By Rupa

கோடநாடு கொலை கொள்ளை வழக்கு.. EPS க்கு நெருங்கும் சிக்கல்!! இனி தப்பிக்கவே முடியாது!!

Rupa

Kodanadu murder and robbery case.. Problem approaching EPS!! Can't escape anymore!!

ADMK DMK : தமிழ்நாட்டின் சட்டமன்ற தேர்தல் வருவதற்கு இன்னும் ஓராண்டு மட்டுமே இருக்கும் நிலையில் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சியில் என அனைவரும் தங்களது கூட்டணியை வலுப்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளனர். அதுமட்டுமின்றி மறைமுகமாக ஆளும் கட்சியையும் எதிர்க்கட்சி தாக்கி வருகிறது. குறிப்பாக அமைச்சர்களை குறிவைத்து லஞ்ச ஒழிப்புத்துறை, அமலாக்கத்துறை உள்ளிட்டோர் மூலம் ரெய்டு நடத்தி வருகின்றனர். இதன் பின்னணியில் அதிமுக மற்றும் பாஜக இருப்பதாக திமுக குற்றச்சாட்டை முன்வைக்கிறது.

அதேபோல் திமுகவும், அதிமுகவை ஆட்டம் காட்ட வேண்டும் என்ற எண்ணத்தில் கோடநாடு வழக்கை மீண்டும் கையில் எடுத்துள்ளது. திமுக ஆட்சிக்கு வந்தால் கோடநாடு எஸ்டேட் சம்பந்தமான வழக்கை விசாரித்து தவறு செய்தவருக்கு தண்டனை வாங்கி கொடுப்போம் என கூறியிருந்தது. அதன்படி வழக்கானது சிபிசிஐடி கைக்கு மாற்றம் செய்யப்பட்டது. சிபிசிஐடி விசாரித்ததில் கிட்டத்தட்ட 1500 பக்கம் கொண்ட ஆவணங்கள் இதுவரை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன் தனிப்படை அமைத்து விசாரணை செய்த ஆவணங்கள் கொண்டு சிபிசிஐடி வழக்கை கையில் எடுத்து விசாரிக்க தொடங்கியது. இதில் கோடநாடு எஸ்டேட் மேனேஜர், தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட எஸ்டேட்டின் கணினி பொறியாளருடைய  அப்பா என பல தரப்பிடம் தனிப்பட்ட விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையில் சசிகலாவின் அண்ணியார் இளவரசி மற்றும் எடப்பாடி பழனிச்சாமி, ஓய்வு பெற்ற காவல் அதிகாரிகள் உள்ளிட்டோரின் பெயர் அடிபட்டுள்ளது.

இதில் சசிகலா மற்றும் ஜெயலலிதா அவர்களின் பாதுகாவலர்களிடம் விசாரணை செய்துவிட்டனர். இனிவரும் நாட்களில் எடப்பாடி பழனிச்சாமி இளவரசி உள்ளிட்டோருக்கு சம்மன் அனுப்பி விசாரணை செய்ய உள்ளதாக கூறியுள்ளனர். அப்படி இந்த வழக்கில் எடப்பாடி பழனிச்சாமி சிக்க நேர்ந்தால் 2026 சட்டமன்றத் தேர்தலானது அதிமுக வசம் இருக்காது என்பது உறுதி.