இதனை விவாதிக்க அதிமுகவிற்கு திராணி இருக்கின்றதா? எதிர்க்கட்சியை கேள்வி எழுப்பிய முக்கிய நபர்!

Photo of author

By Sakthi

கொடநாடு விவகாரம் தொடர்பாக விவாதம் செய்வதற்கு அதிமுக ஏன் பயப்படுகிறது என காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற கட்சித் தலைவர் செல்வப்பெருந்தகை கேள்வி எழுப்பியிருக்கிறார். கொடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்குகள் தொடர்பாக சட்டசபையில் இன்று கவனயீர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்படும் என்று ஏற்கனவே ஊடகங்களில் அறிவித்திருந்த நிலையில் இன்றைய தினம் அந்த கட்சியின் சட்டமன்ற கட்சித் தலைவர் செல்வபெருந்தகை கவனயீர்ப்பு தீர்மானத்தை கொண்டு வந்தார்.

முன்னதாக அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். அதிமுகவின் வழக்கறிஞர் இன்பதுரை செல்வப்பெருந்தகை மீதும் குற்ற வழக்குகள் இருக்கின்றன. அவற்றையும் சட்டசபையில் விவாதம் செய்யலாமா? என்று கேள்வி எழுப்ப இயலுமா என தெரிவித்திருந்தார்.

இந்த சூழ்நிலையில், சென்னையில் பத்திரிக்கையாளர்களை சந்தித்த செல்வபெருந்தகை இந்த வழக்கில் இருக்கும் கேள்விகள் சாயம் மனோஜ் ஏன் 90 தினங்களில் பிணையில் வெளி வந்தார்கள்? எதற்காக பத்திரிக்கையாளர்களை டெல்லியில் சந்தித்தார்கள்? இது தொடர்பான ஆவணப் படம் எடுத்த மேற்றிசை கைது செய்ய ஏன் தமிழக காவல்துறை டெல்லி சென்றது? எதற்காக அவர் மீது குண்டர் சட்டம் போடப்பட்டது? இதற்கெல்லாம் பதில் சொல்லாமல் என்னை பற்றி பேசுவது ஏன்? நாங்கள் ஒரு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து இருக்கின்றோம். தைரியமிருந்தால் எதிர் அணியை சேர்ந்தவர்கள் சட்டமன்றத்திற்கு வந்து இது தொடர்பாக பதில் கூற வேண்டியது தானே அவனை விடுத்து காலையிலேயே பத்திரிக்கையாளர்களை சந்தித்து என்னைப்பற்றி உரையாற்றுவது ஏன் என கேள்வி எழுப்பியிருக்கிறார்.

ஜெயலலிதாவை உண்மையிலேயே நேசித்த, நேசித்துக் கொண்டிருக்கும், தொண்டர்கள் என்னை தொடர்பு கொண்டு இந்த விவாதம் தொடர்பாக முயற்சி செய்வதற்காக நன்றி தெரிவித்து இருக்கிறார்கள். ஆனாலும் எதற்காக அதிமுகவைச் சேர்ந்தவர்கள் பயப்படுகிறார்கள் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு இந்த ஆட்சி நீதி வழங்கும் ஒருவேளை அதிமுகவைச் சேர்ந்தவர்கள் சட்டசபையில் விவாதிக்க தயாராக இல்லை என்றால் மக்கள் மன்றத்தில் விவாதம் செய்வோம் என்று பதிலளித்தார் செல்வப்பெருந்தகை.