தமிழக சட்டசபையின் பட்ஜெட் கூட்டத் தொடரில் இன்றைய தினம் துறை ரீதியான மானிய கோரிக்கை ஆரம்பமாகிறது சென்ற ஆகஸ்ட் மாதம் 13ஆம் தேதி தமிழக அரசின் இந்த நிதி வருடத்திற்கான மீதம் இருக்கின்ற ஆறு மாதங்களுக்கான நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். அதன் மீதான விவாதத்தின் போது பல கட்சி பிரதிநிதிகளுக்கும் உரையாற்றுவதற்கான வாய்ப்பு அளிக்கப்பட்டது. அதோடு அவர்கள் கேட்ட கேள்விகளுக்கு நிதியமைச்சர் பதில் தெரிவித்தார்.
இந்த சூழ்நிலையில், மூன்று தினங்கள் இடைவெளிக்குப் பின்னர் இன்று ஆரம்பமாகும் சட்டசபை கூட்டத்தொடரில் துறை ரீதியான மானிய கோரிக்கை ஆரம்பமாகிறது. முதல் நாளான இன்றைய தினம் நீர்ப்பாசனத் துறை அமைச்சருமான துரைமுருகன் துறையிலிருந்து ஆரம்பமாகிறது மானிய கோரிக்கை என தெரிவிக்கப்படுகிறது.
அதோடு இந்த சட்டசபை கூட்டத்தொடரில் சென்றது சில தினங்களாக கொடநாடு கொலை வழக்கு மறுவிசாரணை குறித்த பரபரப்பான தகவல்கள் பேசப்பட்டு வருகிறது. சென்ற பதினெட்டாம் தேதி இந்த பிரச்சனையை மையமாகக் கொண்டு 18 மற்றும் 19ம் தேதிகளில் சட்டசபை கூட்டத்தை புறக்கணித்த அதிமுகவைச் சேர்ந்தவர்கள் ஆளுநரை சந்தித்து திமுக அரசு மீது புகார் தெரிவித்தார்கள்.
கோடநாடு கொலை, கொள்ளை குறித்த மறு விசாரணையில் எஸ்டேட் காவலாளி கிருஷ்ண பகதூர், மேனேஜர் நடராஜன் மற்றும் குற்றம்சாட்டப்பட்டு இருக்கும் சயான் உள்ளிட்டோரின் வாக்குமூலங்கள் செய்தித்தாள்களில் வெளியாகி பரபரப்பை உண்டாக்கியது. இந்த வழக்கு குறித்த முக்கிய ஆவணமும் போலீசாரிடம் சிக்கி இருக்கிறது.
சட்டசபையில் அடுத்தகட்டமாக இன்றைய தினம் காங்கிரஸ் கட்சியும் இந்த விவகாரத்தை கையில் எடுத்திருக்கின்றது. சென்ற 20 ஆம் தேதி ராஜீவ் காந்தி பிறந்த நாளை முன்னிட்டு அவரது சிலைக்கு மரியாதை செலுத்திய தமிழக காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற தலைவர் செல்வபெருந்தகை கருத்து தெரிவித்திருக்கின்றார்.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா குடியிருந்த எஸ்டேட் கொலை கொள்ளை விவகாரம் தொடர்பான தகவல் மிகவும் மர்மமாக இருக்கிறது. ஆகவே எதிர்வரும் திங்கட்கிழமை சட்டசபையில் விதி எண் 55 கவன ஈர்ப்பு தீர்மானம் காங்கிரஸ் கட்சியின் சார்பாக கொண்டுவரப்படும் என்று தெரிவித்தார்.அதனடிப்படையில், இன்று காங்கிரஸ் கட்சியின் சார்பாக சட்டசபையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்படுகிறது.
இந்த கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீது விவாதம் நடந்தால் அது தொடர்பான மேலும் பல பரபரப்பு தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை அதிமுக எவ்வாறு சந்திக்கப் போகிறது என்பது தொடர்பாகவும், அரசியல் வட்டாரம் கவனித்து வருகின்றது.