Kodukkapuli benefits: இந்த பழம் கிடைச்சா மிஸ் பண்ணிடாதீங்க.. ஏகப்பட்ட மருத்துவ பயன்கள் இருக்கிறது..!

Photo of author

By Priya

Kodukkapuli benefits: நாம் வாழும் இந்த சுற்றுச்சூழலில் நம்மைச் சுற்றி பல வகையான மரம் செடி, கொடிகள் உள்ளன. அதில் சில மரங்களின் மருத்துவ பயன்கள், பெயர்கள் பற்றி நாம் அறிந்திருப்போம். ஆனால் ஒரு சில மரங்கள் பற்றி நாம் அவ்வளவாக அறிந்திருக்க மாட்டோம். காரணம் இதுபோன்ற மரங்களை மற்ற மரங்களைப் போல வீடுகளில், அல்லது மற்ற இடங்களில் நாம் வளர்க்காத காரணத்தினாலும் இருக்கும். மேலும் இந்த மரங்கள் அழிந்து வரும் மரங்களின் இனங்களில் ஒன்றாகவும் இருக்கும். நாம் இந்த பதிவில் கிராமப்புறங்களில் சிறுவயதாக இருக்கும் பொழுது அறியப்பட்ட கொடுக்காப்புளி மரத்தை (Pithecellobium dulce) பற்றியும், அதன் மருத்துவ பயன்கள் பற்றியும் காணலாம்.

கொடுக்காப்புளியின் மருத்துவ பயன்கள்

கொடுக்காப்புளி, கோண புளி, கோணக்காய், சீனி புளியங்காய் என்று பல வகைகளில் இந்த கொடுக்காப்புளி அழைக்கப்படுகிறது.

இது அதிகளவு கலோரிகளையும், அதற்கு அடுத்தபடியாக அதிகளவு நீர்ச்சத்தும் கொண்ட ஒரு பழமாக பார்க்கப்படுகிறது. இந்த பழத்தில் கொழுப்பு, கார்போஹைட்ரேட், கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, சோடியம், பொட்டாசியம், வைட்டமின் ஏ, வைட்டமின் பி1, வைட்டமின் சி, பைபர், சாம்பல் போன்ற ஊட்டச்சத்துக்கள் காணப்படுகின்றன.

கொடுக்காப்புளி மரத்தின் இலைகள் அலர்ஜி எதிர்ப்பு மருந்தாக பயன்படுகிறது. காசநோய் நீரிழிவு நோய்க்கு இந்த கொடுக்காப்புளி சிறந்த மருந்தாக பயன்படுகிறது.

மேலும் இதில் வைட்டமின் சி உள்ளதால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை வளப்படுத்துகிறது.

மேலும் சருமத்தை பொலிவுடன் வைப்பதற்கு, முடி உதிர்வை தடுப்பதற்கு, ரத்த ஓட்டத்தை சீர்படுத்துவதற்கு, ரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்துவதற்கு, வாய்ப்புண்கள், மற்றும் வயிற்றுப் புண்களை தீர்ப்பதற்கு, பித்தப்பைக் கோளாறு போன்ற பிரச்சனைகளுக்கு இந்த கொடுக்காப்புளி சிறந்த மருந்தாக பயன்படுகிறது.

மேலும் கொடுக்காப்புளி மரத்தின் இலைகள் அஜீரணத்திற்கு சிறந்த தீர்வாக உள்ளது.

கொடுக்காப்புளி மரத்தின் பட்டை மலைச்சிக்கலை குணப்படுத்துகிறது.

இதில் வைட்டமின் பி1 இருப்பதால் நரம்புகளுக்கு ஊட்டம் அளிக்கிறது.

வைட்டமின் பி2 தோல், நகம் போன்றவைகளுக் ஊட்டமளிக்கிறது.

வைட்டமின் பி3 நியாஸின் உள்ளதால் உடலில் உள்ள கொலஸ்ட்ரால் அளவுகளை கட்டுப்படுத்துகிறது. மேலும் கால்சியம், பாஸ்பரஸ், உடலின் எலும்புகளுக்கு வலு சேர்க்கிறது. இரும்புச்சத்து ரத்த சோகையை தடுக்கிறது.

மேலும் படிக்க: இந்த பழத்தை எங்கு பார்த்தாலும் விடாதீங்க..!! மலச்சிக்கல் முதல் அனைத்து வயிற்று பிரச்சனைக்கும் தீர்வு..!!