இன்ஸ்டாகிராம் மூலமாக வருமானம்… கோலி சம்பாதித்தது இத்தனைக் கோடிகளா?

0
163

இன்ஸ்டாகிராம் மூலமாக வருமானம்… கோலி சம்பாதித்தது இத்தனைக் கோடிகளா?

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி கிரிக்கெட் உலகின் சூப்பர் ஸ்டார்களில் ஒருவராக திகழ்கிறார்.

ஆசியக் கோப்பை தொடரில் சதமடித்து மீண்டும் தன்னுடைய பார்முக்கு திரும்பிய கோலி, ஆஸி அணிக்கு எதிரான தொடரிலும் சிறப்பாக விளையாடி வருகிறார். இதையடுத்து விரைவில் தொடங்க உள்ள இந்திய அணிக்கு அவர் பக்கபலமாக இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய அளவில் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் கடந்த சில ஆண்டுகளாக சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் கோலிதான். கிரிக்கெட் மூலமாக ஈட்டும் வருவாய் மட்டுமில்லாமல் கோலி, விளம்பரங்கள் மூலமாகவும் அதிகளவில் வருவாயை ஈட்டிவருகிறார். குறிப்பாக இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூகவலைதளங்கள் மூலமாகவே அவர் ஆண்டுக்குக் கோடிக் கணக்கில் வருவாய் ஈட்டி வருகிறார்.

இந்நிலையில் இந்தியாவில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதிக பாலோயர்களைக் கொண்ட பிரபலம் கோலிதான். இந்நிலையில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்கள் மற்றும் வீடியோ மூலமாக ஸ்பான்சர்களிடம் இருந்து அவர் 36 மில்லியன் டாலர் வருவாயாக ஈட்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது இந்திய மதிப்பில் கிட்டத்தட்ட 300 கோடியாகும்.

இப்படி அதிக வருவாய் ஈட்டிய வீரர்களின் பட்டியலில் கால்பந்து வீரர்களான ரொனால்டோ மற்றும் மெஸ்ஸி ஆகியோர் முதல் இரண்டு இடத்தில் இருக்க, கோலி மூன்றாம் இடத்தில் இருக்கிறார். ரொனால்டோ 86 மில்லியன் டாலர்களும், மெஸ்ஸி 79 மில்லியன் டாலர்களும் வருவாயாக ஈட்டியுள்ளனர்.

Previous articleதெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு! ரயில் சேவையில் நேரங்கள் மாற்றம்!
Next article2 வருடம்… 50க்கும் மேற்பட்ட நாடுகள்… உலக சுற்றுலாவுக்கு திட்டமிடும் அஜித்! எப்போ தெரியுமா?