ஹோட்டல் வீடியோ சர்ச்சை விவகாரம்… பெருந்தன்மையான முடிவை எடுத்த கோலி!

0
326

ஹோட்டல் வீடியோ சர்ச்சை விவகாரம்… பெருந்தன்மையான முடிவை எடுத்த கோலி!

இந்திய அணியின் வீரர் கோலியின் அறையை வீடியோவாக எடுத்து அதை சமூகவலைதளத்தில் பகிர்ந்தார் ஒரு ரசிகர்.

சில தினங்களுக்கு முன்னர் கோலி தன்னுடைய சமூகவலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ள வீடியோவும் அது சம்மந்தமான ஆதங்கமான பதிவும் கவனத்தை ஈர்த்துள்ளன. ரசிகர் ஒருவர் கோலி தங்கியுள்ள ஹோட்டல் அறையை வீடியோவாக எடுத்து அதை சமூகவலைதளத்தில் பகிர்ந்திருந்தார். அந்த வீடியோ இணையத்தில் அதிகம் பேரால் பார்க்கப்பட்ட ஒன்றாக அமைந்தது.

அதுகுறித்து கோலி “ரசிகர்கள் தங்களுக்குப் பிடித்த வீரர்களைப் பார்த்து மிகவும் மகிழ்ச்சியாகவும், உற்சாகமாகவும் அவர்களைச் சந்திப்பதில் உற்சாகம் அடைகிறார்கள். எனது சொந்த ஹோட்டல் அறையில் தனியுரிமை இருக்க முடியாவிட்டால், அப்படியானால், தனிப்பட்ட இடத்தை நான் எங்கே எதிர்பார்க்க முடியும்?” எனக் கேள்வி எழுப்பி இருந்தார். இதையடுத்து சம்மந்தப்பட்ட அந்த ஊழியரை ஹோட்டல் நிர்வாகம் பணியில் இருந்து நீக்கியது.

இந்நிலையில் இந்திய அணி நிர்வாகம் சம்மந்தப்பட்ட ஹோட்டல் நிர்வாகம் மீது புகாரளிக்க விரும்புகிறீர்களா என கோலியிடம் கேட்டுள்ளது. ஆனால் கோலி பெருந்தன்மையாக வேண்டாம் என மறுத்துள்ளார்.

உலகக்க்கோப்பை தொடரில் சிறப்பாக விளையாடி வரும் கோலிக்கு இது போன்ற சம்பவங்கள் கவனச் சிதறலாக அமைந்துள்ளன. இன்று இந்திய அணி அடிலெய்டில் பங்களாதேஷை எதிர்கொள்கிறது. இந்த போட்டியில் வென்று இந்தியா தங்களது அரையிறுதி வாய்ப்பை மேலும் பிரகாசமாக்கும் என்று நம்பப்படுகிறது.

Previous articleபாஜகவின் அசுர வளர்ச்சியால் அலறும் ஆளும் கட்சியினர்!
Next article2 நாள் பயணமாக சென்னைக்கு வருகிறார் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி! முதல்வரை சந்திப்பாரா?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here