கடைசிப் பந்து வீசும் முன் ஷமியிடம் கோலி சொன்ன ஒரு வார்த்தை:வெற்றி பெற்றது எப்படி?

0
124

கடைசிப் பந்து வீசும் முன் ஷமியிடம் கோலி சொன்ன ஒரு வார்த்தை:வெற்றி பெற்றது எப்படி?

இந்தியா மற்றும் நியுசிலாந்து அணிகளுக்கு இடையிலான போட்டியில் சூப்பர் ஓவரில் வெற்றி பெற்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி வெற்றி பற்றி பகிர்ந்துகொண்டுள்ளார்.

நியூசிலாந்து சென்றுள்ள இந்திய அணி அங்கு 5 டி 20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. அத் தொடரின் முதல் இரண்டு போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்று 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது. அதையடுத்து ஹேமில்டன் மைதானத்தில் இன்று தொடங்கிய போட்டியில் டாஸ் வென்ற நியுசிலாந்து இந்தியாவை பேட்டிங் செய்ய பணித்தது. அதன் படி களமிறங்கிய இந்திய அணி 179 ரன்களை சேர்த்தது.

அதன் பின் களமிறங்கிய நியுசிலாந்து அணி சிறப்பாக விளையாடி வெற்றியை நெருங்கிக் கொண்டிருந்த வேளையில் கடைசி ஓவரை வீசிய ஷமி ஆட்டத்தின் போக்கை மாற்றினார். கடைசி 9 ரன்கள் சேர்க்கவேண்டிய நிலையில் அவர் வில்லியம்சன் மற்றும் ராஸ் டெய்லர் ஆகியோரின் விக்கெட்களைக் கைப்பற்றியதால் போட்டி டை யில் முடிந்தது. அதன் பிறகு இந்திய அணி சூப்பர் ஓவரில் வெற்றி பெற்றது.

20 ஓவரின் கடைசி பந்தை ஷமி வீச இருந்த போது களத்தில் ராஸ் டெய்லர் பேட் செய்து கொண்டிருந்ததால் எளிதாக வெற்றி பெற்று விடும் என்ற நிலையில் கோலி ஷமியோடு ஆலோசனை நடத்தினார். அப்போது அவர்’ பந்தை ஸ்டம்புக்கு நேராகப் போட்டு விக்கெட் எடுத்தாலொழிய நாம் வெல்ல முடியாது’ எனக் கூறியுள்ளார். இதையடுத்து ஷமி வீசிய பந்தை டெய்லர் அடிக்க முயன்ற போது அவர் போல்ட் ஆக போட்டி டையில் முடிந்தது. கோலியும் ஷமியும் சேர்ந்து எடுத்த அந்த முடிவுதான் இந்தியா வெற்றிபெறக் காரணமாக அமைந்தது.இதனை போட்டி முடிந்த பின் கோலி பகிர்ந்து கொண்டுள்ளார்.

Previous articleஅடுத்த மாதம் திருமணம்:பெண்ணைப் பற்றி மனம் திறந்த யோகிபாபு!
Next article’தர்பார்’ நஷ்டம் என்பது உண்மையா? ரஜினியை மிரட்டுகிறார்களா விநியோகிஸ்தர்கள்?