விரைவில் கேப்டன்ஸி பொறுப்பிலிருந்து நீக்கப்படும் விராட் கோலி? – BCCI அதிரடி

Photo of author

By Parthipan K

விரைவில் கேப்டன்ஸி பொறுப்பிலிருந்து நீக்கப்படும் விராட் கோலி? – BCCI அதிரடி

2008ம் ஆண்டு இந்திய அணிக்குள் அடியெடுத்து வைத்தவர் விராட் கோலி. தனது தனித்துவமான ஆட்டத்தால் உலகெங்கும் பல ரசிகர்களைக் கொண்டுள்ளார். பல கிரிக்கெட் வீரர்களே தங்களை இவரது ரசிகர்கள் எனக் கூறிக்கொள்வார்கள்.

சச்சின், தோணியைத் தொடர்ந்து இந்திய கிரிக்கெட்டின் அணியின் அடையாளமாக தற்போது திகழ்வது விராட் கோலி தான். சச்சினின் சாதனைகளை தற்போதைக்கு முறியடிக்க முடிந்த நிலையிலுள்ள ஒரே வீரரும் கோலி தான் என்பது கிரிக்கெட் வல்லுநர்களின் ஒருமித்த கருத்து.

இந்நிலையில் கடந்த 2017ம் ஆண்டு முதல் இந்திய அணியின் தலைவர் பொறுப்பை வகுத்து வருகிறார் கோலி. ஒரு பேட்ஸமேனாக சிறந்த ஆட்டக்காரராகக் கோலி தான் உலக அளவில் சிறந்தவர் என்றாலும் ஒரு சிறந்த அணித்தலைவர் என அவரை குறிப்பிட முடியாது. திறமை வாய்ந்த ஆட்டக்காரர்களாலும், நெருக்கடியான சூழலில் தோணியின் ஆலோசனையாலுமே கோலி ஆட்டங்களை வெற்றி பெற்று வருகிறார் என்ற கருத்து உண்டு.

அதற்கு உதரானமாக அவர் ஐபிஎலில் அணித்தலைவராக இருக்கும் ஆர்.சி.பி அணியைச் சுட்டிக்காட்டுவார்கள். பல உலகத்தரம் வாய்ந்த ஆட்டக்காரர்கள் இருந்தும் கோலியால் 12 ஆண்டுகளில் ஒரு முறை கூட ஐபிஎல் கோப்பையை வெல்ல முடியாததற்கு அவருக்குத் தலைமைப் பண்பு இல்லாததே காரணம் என்ற குற்றச்சாட்டு உண்டு.

தற்போது கொரோனாவால் உலகமே பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு மட்டும் சுமார் 2000 கோடி வரை நிதி இழப்பு என்று கூறப்படுகிறது. இந்த வருடம் ஐபிஎல் போட்டிகள் நடத்த முடியுமா என்ற நிலை நீடிப்பதால், பிசிசிஐ சில அதிரடி முடிவுகளை எடுக்கவிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

அதன் படி டெஸ்ட், ஒரு நாள் மற்றும் 20 ஓவர் போட்டிகளுக்கென்று தனித்தனியாக அணிகளைக் கட்டமைத்து ஒரே நேரத்தில் இந்த மூன்று விதமான போட்டிகளிலும் இந்திய அணியைப் பங்குகொள்ள வைப்பதன் மூலம் இழந்த வருவாயைச் சரி கட்ட முடியும் என நம்புகிறது.

இதன் காரணமாக டெஸ்ட் போட்டிகளுக்கு மட்டும் விராத் கோலியை அணித்தலைவராக வைத்து கொண்டு, ஒரு நாள் மட்டும் 20 ஓவர் போட்டிகளுக்கு வெவ்வேறு அணி மற்றும் அணித்தலைவர்களை நியமிக்க ஆலோசிக்கப்பட்டு வருகிறதாம். ஒரு நாள் மற்றும் 20 ஓவர் போட்டிகளுக்கு ரோஹித் ஷர்மாவை அணித்தலைவராகத் தேர்ந்தெடுக்க திட்டமிடப்பட்டுள்ளதாம். ஒரே நேரத்தில் டெஸ்ட் மற்றும் ஒரு நாள் அல்லது 20 ஓவர் நடைபெறும் சூழல் ஏற்பட்டால் அப்போது அவருக்குப் பதிலாக கே.எல்.ராகுலை அணித்தலைவராக நியமிக்க திட்டமிடப்பட்டுள்ளதாம்.

டெஸ்ட் போட்டியில் முரளி விஜய், சத்தீஷ்வர் புஜாரா, ரவி அஷ்வின், ஹனுமா விஹாரி, விரிதிமான் சாஹா, இஷாந்த் சர்மா, முகமது ஷமி, ரோஹித் சர்மா, மயங்க் அகர்வால், அஜின்க்யா ரஹானே இடம் பெற வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

ஒருநாள் மற்றும் 20 ஓவர் போட்டிகளில் கே எல் ராகுல், ரிஷப் பண்ட், பும்ரா, குல்தீப் யாதவ், சாஹல், தீபக் சாஹர், ஸ்ரேயாஸ் ஐயர், புவனேஸ்வர் குமார், மனிஷ் பாண்டே, ஷிகர் தவான், ஹார்திக் பாண்டியா, க்ருனால் பாண்டியா, வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் இடம் பெற வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.

ஆஸ்திரேலய கிரிக்கெட் அணி பல வருடங்களாக இந்த நடைமுறையைப் பின்பற்றி வருவது குறிப்பிடத்தக்கது.