இந்தியாவில் நடந்த அழகிப் போட்டியில், ‘மிஸ் இந்தியா குளோபல்’ பட்டத்தை பெற்ற ஆஷிமா. அழகிப் போட்டிகளுக்கு பிறகு பாலிவுட்டிலிருந்து சினிமா வாய்ப்பு வந்தது.
தெலுங்கில் ‘நாடகம்’ படத்தின் மூலம் அறிமுகம் ஆகி அடுத்து ஜெர்ஸி என்னும் படத்தில் நடித்தார். இந்த படம் அவருக்கு பெரிய ஹிட்டை கொடுத்தது. அதன் பிறகு தமிழில் விஜய் ஆண்டனி மற்றும் அர்ஜுன் நடிப்பில் கடந்த வருடம் வெளியான கொலைகாரன் படத்தில் கதாநாயகியாக நடித்தார்.
தற்போது ராஜ பீமா படத்தில் ஆரவ் ஜோடியாக நடித்து வருகிறார் என்னும் தகவல் வெளியாகி உள்ளது. தமிழில் கொலைகாரன் எனும் ஒரு படத்தில் நடித்திருந்தாலும் அதிக அளவில் ரசிகர்களை பெற்றுள்ளார்.

தமிழில் இன்னும் பெரிய பிரபல நடிகர்களுடன் நடிக்கும் ஆசையெல்லாம் இருக்காம்!
அந்த வகையில், தற்போது பாரபட்ட சமின்றி தன்னுடைய அழகை அள்ளி தந்து ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.