2k கிட்ஸின் காதல் கதை…  ‘கோமாளி’ இயக்குனர் நடிக்கும் புதிய படம்… விஜய் பட டைட்டில்!

0
259

2k கிட்ஸின் காதல் கதை…  ‘கோமாளி’ இயக்குனர் நடிக்கும் புதிய படம்… விஜய் பட டைட்டில்!

இயக்குனர் பிரதீப் நடிப்பில் உருவாகும் படத்தின் அறிவிப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

ஜெயம் ரவி, காஜல் அகர்வால் மற்றும் யோகி பாபு நடிப்பில் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான் திரைப்படம் ‘கோமாளி’. இந்த படத்தை அறிமுக இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயக்கி இருந்தார். அந்த ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற படங்களில் ஒன்றாக கோமாளி அமைந்தது. மிகப்பெரிய வெற்றி பெற்றதை அடுத்து அடுத்து பிரதீப் இயக்கும் படம் குறித்த எதிர்பார்ப்புகள் எழுந்தன.

இதையடுத்து இப்போது அவரே இயக்கி நடிக்கும் படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ள அந்த படத்துக்கு ‘Love Today’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த பெயரில் 90 களில் விஜய் நடித்த படம் ஒன்று வெளியானது குறிப்பிடத்தக்கது. படத்தின் முதல் லுக் போஸ்டர் தற்போது வெளியாகி கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.

தற்கால இளைஞர்களின் காதலை சொல்லும் படமாக இந்த படம் உருவாகும் என சொல்லப்படுகிறது. அதைக் குறிக்கும் விதமாக போஸ்டரும் உருவாகியுள்ளது. இந்த படத்துக்குப் பிறகு பிரதீப் ஜெயம் ரவி மற்றும் விக்ரம் ஆகியோர்களை வைத்து படத்தை இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

2k கிட்ஸின் காதல் கதை…  ‘கோமாளி’ இயக்குனர் நடிக்கும் புதிய படம்… விஜய் பட டைட்டில்!

Previous articleதமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்து கொண்ட மு.க ஸ்டாலின்! 60  ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டார்!..
Next articleஇன்று காலை 11 மணிக்கு சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் வெளியீடு! எளிய முறையில் பார்த்துக் கொள்ளலாம் இதனை செய்யுங்கள்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here