நடிகர் ரஜினி இன்றி எடுக்கப்படும் கூலி திரைப்படம்!! போராட்டத்தில் லோகேஷ் கனகராஜ்!!

Photo of author

By Gayathri

வேட்டையன் திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் ரஜினி அவர்கள் தற்பொழுது நடித்து வரும் திரைப்படம் தான் கூலி. ஆனால் இத்திரைப்படத்தில் இவர் நடிக்கவில்லை என்ற தகவல்கள் தற்பொழுது வெளியாகி ரசிகர்களிடையே மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்க உருவாகும் திரைப்படம் தான் கூலி. இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும் தருணத்தில் திடீரென நடிகர் ரஜினி அவர்களுக்கு உடல்நிலை மோசமாக, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு மைனர் ஆப்ரேஷன் செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.

மேலும், சண்டை காட்சிகளில் ரஜினி அவர்கள் நடிக்க கூடாது என்று மருத்துவர்கள் உத்தரவிட்டுள்ளதாகவும், அதனால் கூலி திரைப்படத்தில் வரும் சண்டை காட்சிகளில் அவரை பெரிதளவு ஈடுபடுத்த போவதில்லை என்று லோகேஷ் கனகராஜ் அவர்கள் பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் என்று இப்படத்தினை முழுமையாக இயக்க முடியாது என்றாலும் அவர் இல்லாத காட்சிகளை படமாக்கும் வேலைகளில் லோகேஷ் கனகராஜ் அவர்கள் ஈடுபட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து, தற்பொழுது எம்ஜிஎம், ஷாப்பிங் மால் போன்ற இடங்களிலும் சூட்டிங் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

இதில் ரஜினியும் இருக்க வேண்டிய காட்சிகளும் எடுக்கப்பட்டு வருகிறது. ஆனால் ரஜினியால் தற்போது படபிடிப்பில் பங்கெடுக்க முடியாது, அதிலும் மக்கள் கூடும் இடங்களில் வருவதற்கு வாய்ப்பே இல்லை என்ற தகவல்களும் வெளியாகியுள்ளன.

முதலில் படபிடிப்பை முடித்துவிட்டு அதன் பின்னர் ரஜினியை நடிக்க வைத்து அதை சிஜி மூலம் இணைப்பதற்கான வேலைகளை பார்க்கலாம் என லோகேஷ் முடிவெடுத்திருப்பதாக வலைப்பேச்சு சேனல் தெரிவித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.