தாமரை மலரவே மலராது போலிருக்கே:விஜய்க்கு ஆதரவாகக் களமிறங்கும் திரையுலம்!

Photo of author

By Parthipan K

தாமரை மலரவே மலராது போலிருக்கே:விஜய்க்கு ஆதரவாகக் களமிறங்கும் திரையுலம்!

விஜய்யின் மாஸ்டர் படத்தின் படப்பிடிப்புத் தளத்தில் ஆர்ப்பாட்டம் செய்யும் பாஜகவினருக்கு எதிராக திரையுலகம் விஜய்க்கு ஆதரவு தெரிவித்துள்ளது.

விஜய் நடித்த பிகில் படத்தின் தயாரிப்பு நிறுவனம் மற்றும் பைனான்சியர் அன்புச்செழியன் ஆகியோரின் அலுவலகங்களில் நேற்று வருமான வரிச்சோதனை நடந்தது. இதையடுத்து விஜய் வீட்டிலும் சோதனை நடத்தும் பொருட்டு ’மாஸ்டர்’ படத்தின் படப்பிடிப்புக்கு வந்த வருமானத் துறை விஜய்யை சென்னைக்கு அழைத்துச் சென்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

நெய்வேலி ஷூட்டிங்கில் இருந்து பாதியிலேயே அவர் வந்து விட்டதால் மீண்டும் எப்போது ஷுட்டிங் தொடங்கும் எனத் தெரியாது என செய்திகள் வெளியான நிலையில் அடுத்த நாளே நெய்வேலியில் ஷூட்டிங் தொடங்கியது. இந்நிலையில் படப்பிடிப்புத் தளத்தில் கூட்டமாக சென்ற பாஜகவினர் ஆர்ப்பாட்டம் செய்து படப்பிடிப்புக்கு இடையூறு செய்தனர். இதையடுத்து போலிஸார் பாதுகாப்போடு படப்பிடிப்புத் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் பாஜகவினருக்கு எதிராக விஜய்யின் மக்கள் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் கூட்டம் கூட்டமாக வந்து விஜய்க்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். இந்நிலையில் பாஜகவினருக்கு போக்கைக் கண்டிக்கும் விதமாக திரை  தொழிலாளிகளின் கூட்டமைப்பான பெஃப்சியின் தலைவரான செல்வமணி ‘ பாஜகவின் இத்தகைய நடவடிக்கைகளால் சினிமா தொழிலாளர்கள் பாதிக்கப்படுகிறார்கள். சினிமாவில் அரசியல் வேண்டாம்’ எனக் கூறியுள்ளார்.

இதையடுத்து சமூகவலைதளத்திலும் பாஜகவுக்கு எதிரானக் குரல்கள் எழுந்துள்ளன. பலர் என்ன செய்தாலும் தமிழகத்தில் தாமரை மலரவே மலராது எனக் கருத்து தெரிவித்து வருகின்றனர்.