சோலோவாக களமிறங்கும் கோட்.. ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழுவினர்..!!

Photo of author

By Vijay

சோலோவாக களமிறங்கும் கோட்.. ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழுவினர்..!!

Vijay

Updated on:

Kot to debut solo.. The crew announced the release date..!!

சோலோவாக களமிறங்கும் கோட்.. ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழுவினர்..!!

நடிகர் விஜய் முதல் முறையாக இயக்குனர் வெங்கட் பிரபு உடன் இணைந்திருக்கும் கோட் படம் மீதான ரசிகர்கள் எதிர்பார்ப்பு படம் தொடங்கிய நாள் முதல் உச்சத்தில் தான் உள்ளது.ஏனெனில் வெங்கட் பிரபு முன்னதாக அஜித்திற்கு மங்காத்தா என்ற சூப்பர் டூப்பர் ஹிட் படத்தை கொடுத்தவர் என்பதால்.

அதுமட்டுமல்ல இந்த படத்தில் விஜய் தவிர நடிகர்கள் மைக் மோகன், பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல், நிதின் சத்யா, மற்றும் நடிகைகள் சினேகா, லைல, மீனாட்சி சவுத்ரி என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர். படத்தி கதை குறித்து வேறு நிறைய செய்திகள் உலா வருவதால் படம் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து காணப்படுகிறது.

இந்நிலையில், ரம்ஜான் பண்டிகை நாளான இன்று கோட் படக்குழுவினர் முக்கிய அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.அதன்படி, கோட் படம் வரும் செப்டம்பர் மாதம் 5 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி அன்று வெளியாகும் என அறிவித்துள்ளான்ர். இதனால் விஜய் ரசிகர்கள் இப்போதே படத்திற்காக தயாராக தொடங்கி விட்டார்கள்.

முன்னதாக இந்த படம் ரஜினியின் வேட்டையன் படத்திற்கு போட்டியாக ஆகஸ்ட் மாதம் வெளியாகும் அல்லது புஷ்பா படத்திற்கு போட்டியாக வெளியாகும் என்று கூறப்பட்டது.ஆனால் புஷ்பா 2 படம் ஆகஸ்ட் மாதமும், வேட்டையன் அக்டோபர் மாதமும் வெளியாக உள்ள நிலையில், கோட் சோலோவாக வெளியாக உள்ளது.

விநாயகர் சதுர்த்தி அன்று விஜய் படம் வெளியாக இருப்பதால், அன்றைய தினம் வேறு எந்த படமும் வெளியாக வாய்ப்பே இல்லை.எனவே நிச்சயம் கோட் சோலோவாக களமிறங்கி வசூலை வாரி குவிக்கும் என்பதில் எந்த சந்தேகமும் கிடையாது.