கொரோனா பரவல் தமிழகத்தில் அதிகரித்து வருகிறது. இன்று தமிழகத்தில் மட்டும் சுமார் 500க்கும் மேற்பட்டார்களுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. கடந்த சில தினங்களாக கோயம்பேடு சந்தை மூலமாக கொரோனா தொற்றுக்கு 50க்கும் மேற்பட்டவர்கள் பாதிப்படைந்துள்ளனர்.
இதனால் இன்று காலை கோயம்பேடு சந்தைக்கு சென்று ஆய்வை மேற்கொண்டார் சென்னை கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்தவர் “அதன் பின்னர் செய்தியாளர்களிடம் சந்தித்தவர் “கோயம்பேட்டில் அனைத்து வியாபாரிகள், தொழிலாளர்களுக்குச் சோதனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தற்போது பாதிப்பு கண்டறியப் படுபவர்களில் பெரும்பாலானோருக்கு கொரோனா குறித்த அறிகுறி எதுவும் தென்படவில்லை. ஆனால் அவர்களுக்குப் பரிசோதனை மூலமே பாதிப்பு தெரியவந்துள்ளது. இந்த பரிசோதனையை அதிகரிப்பதால் பாதிப்பு அதிகமாகத் தெரியவருகிறது.
கோயம்பேட்டிலிருந்து பிற மாவட்டங்களுக்குச் சென்ற தொழிலாளர்கள் அனைவருக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தமிழகத்தில் இறப்பு விகிதம் மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் குறைவு. இந்த பரிசோதனையை அதிகரிப்பதால் பாதிப்பு அதிகமாகத் தெரியவருகிறது. கோயம்பேட்டிலிருந்து பிற மாவட்டங்களுக்குச் சென்ற தொழிலாளர்கள் அனைவருக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.” என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் கோயம்பேடு சந்தை நிர்வாக குழு சார்பில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. அதில் “பொதுமக்களுக்குக் காய்கறிகள் தங்கு தடையின்றி கிடைக்கவும், விவசாயிகள் உற்பத்தி செய்யும் வேளாண் பொருட்கள் மக்களைச் சென்றடையவும் சென்னை திருமழிசையில் வருகின்ற (7.5.2020) வியாழக் கிழமை முதல் தற்காலிகமாக காய்கறி மொத்த விற்பனை அங்காடி செயல்பட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதற்கான பணிகள் துவங்கப்பட்டுள்ளன.
சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளைச் சேர்ந்த சிறு வியாபாரிகள் திருமழிசை காய்கறி மொத்த விற்பனை அங்காடிக்கு வந்து காய்கறிகளை வாங்கிக் கொள்ளலாம்.
பொதுமக்களின் பாதுகாப்புக்கு மேற்கொள்ளப்படும் மேற்கண்ட நடவடிக்கைகளுக்கு வியாபாரிகளும் பொதுமக்களும் ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.” என்று அறிவிக்கப்பட்டுள்ளது.