National

கோழிக்கோடு விமான விபத்து: மீட்பு பணியில் ஈடுபட்டவர்களுக்கு அதிர்ச்சித் தகவல்

Photo of author

By Parthipan K

கோழிக்கோடு விமான விபத்தில் உயிரிழந்தவர்களையும், விபத்தில் சிக்கியவர்களையும் மீட்பதற்காக மீட்புப் பணியில் ஈடுபட்டவர்களுக்கு கொரோனா தொற்று பரிசோதனைக்காக தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.

கேரள முதல்வர் பினராயி விஜயன் நேற்று செய்தியாளர்கள் சந்திப்பின்போது, மாநிலத்திலுள்ள கொரோனா பாதித்த பகுதிகள் பட்டியல்களை வெளியிட்டார்.

அதில் கோழிக்கோடு விமான விபத்தில் சிக்கி உயிரிழந்த ஒருவருக்கு கொரானா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

இதனடிப்படையில் விபத்திற்கான மீட்பு பணியில் ஈடுபட்ட பணியாளர்கள் தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளார்.

இது மீட்புப் பணியினருக்கு அதிர்ச்சியளிக்கும் விதத்தில் இருந்ததால், அவர்கள் தற்போது தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.

மக்கள் எதிர்ப்பை மீறி ஆரம்பித்த மணல் குவாரியை தடுத்து நிறுத்திய பாமகவினர்

உலகிலேயே விலை உயர்ந்த மாஸ்க் இஸ்ரேல் தயாரித்துள்ளது. மலைக்க வைக்கும் இதன் விலை

Leave a Comment