ADMK: சட்டமன்ற பட்ஜெட் கூட்டுத்தொடர் தொடங்கியதிலிருந்து ஆளும் கட்சியை விட எதிர்கட்சி குறித்து தான் பேச்சுக்கள் அதிகம். உட்கட்சி பூசல் தொடர்ந்து இருப்பதால் அடுத்த கட்ட நகர்வு என்ன என்பதை மக்கள் எதிர்பார்த்து தினந்தோறும் காத்துக் கொண்டிருக்கின்றனர். சொல்லப்போனால் ஒரு தரப்பு எடப்பாடி பக்கமும் மற்றொரு தரப்பு செங்கோட்டையன் பக்கமும் உள்ளது. செங்கோட்டையன் வசம் அதிமுகவை கொண்டு வந்து விடலாம், எடப்பாடியை ஓரங்கட்டலாம் என்றும் திட்டம் தீட்டுகின்றனர்.
இதையெல்லாம் பொருட்படுத்தாமல் எடப்பாடி பழனிச்சாமி ஒரு வழியில் செல்கிறார். அதேபோல சமீபத்தில், நான் யாரையும் எதிர்பார்த்து இல்லை என்று கூறியிருந்தார். செங்கோட்டையனை நம்பி நான் இல்லை என்பதையே எடப்பாடி இவ்வாறு கூறியுள்ளார். இப்படி இருக்கும் சூழலில் பட்ஜெட் கூட்டத்தொடரில் இவர்கள் மோதல் போக்கு அப்பட்டமாகவே வெளிப்பட்டது. இதன் உச்சகட்டமாக சபாநாயகர் அப்பாவுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானத்தை அதிமுக கொண்டு வந்தது.
இதற்கு எதிராக வாக்கெடுப்பு நடத்தப்படும். அச்சமயத்தில் தான் செங்கோட்டையன் சபையை விட்டு வெளியேறினார். உடனடியாக இவர் பின்னே கேபி முனுசாமியும் வெளியேறி அவரை சமாதானப்படுத்தி மீண்டும் அவைக்கு வரவழைத்தார். இவர்கள் இருவரும் கிட்டத்தட்ட ஐந்து நிமிடத்திற்கு மேலாக வெளியே பேசிக்கொண்டனர். அதிலும், நான் பார்த்து கொண்டு வந்தவர்தான் எடப்பாடி பழனிச்சாமி அப்படி இருப்பவர் எனக்கு எதிராக அரசியல் செய்து கொண்டிருக்கிறார்.
ஒரு மாத காலமாக எடப்பாடி செய்யும் செயல்களை பார்த்து தான வருகிறீர்கள்?? என்றெல்லாம் தனது கொந்தளிப்பை கேபி முனுசாமி யிடம் கொட்டியுள்ளார். அனைத்தையும் கேட்ட முனுசாமி கட்டாயம் இது குறித்து எடப்பாடி யிடம் பேசலாம். தற்பொழுது வந்து நம்பிக்கை இல்லா தீர்மானத்திற்கு வாக்களியுங்கள் எனக் கூறியுள்ளார். அவர் பேச்சுக்கிணங்க மீண்டும் சபைக்கு வந்து தனது ஆதரவை தெரிவித்தார். இருப்பினும் இந்த நம்பிக்கை இல்லா தீர்மானமானது தோல்வியை தான் சந்தித்தது. நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் போது அதிமுகவின் கொறடா இதற்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்று கூறினார்.
அச்சமயத்தில் கட்சி நிர்வாகிகள் யாரேனும் புறக்கணிப்பு செய்திருந்தால் அவர்களின் எம்எல்ஏ பதவி கூட தக்க வைத்திருக்க முடியாது. அந்த அளவிற்கு இதன் சூசனம் தெரிந்து தான் கேபி முனுசாமி செங்கோட்டையணி உள் அழைத்துள்ளார்.