அதிமுக சார்பாக அறிவிக்கப்பட்ட இருக்கும் முக்கிய பதவி! பெரும் மகிழ்ச்சியில் முக்கிய புள்ளிகள்!

Photo of author

By Sakthi

அதிமுக சார்பாக அறிவிக்கப்பட்ட இருக்கும் முக்கிய பதவி! பெரும் மகிழ்ச்சியில் முக்கிய புள்ளிகள்!

Sakthi

அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் முன்னாள் துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் தமிழக முன்னாள் முதலமைச்சர் மற்றும் அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளர் தற்போதைய எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்டோர் கூட்டாக ஒரு அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார்கள். அதாவது சட்டமன்ற உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டம் இன்றைய தினம் 12:00 மணி அளவில் சென்னை ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலையில் இருக்கின்ற தலைமைக் கழகத்தில் கழகத்தின் ஒருங்கிணைப்பாளர் திரு ஓபிஎஸ் அதோடு இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்டோர் தலைமையில் நடைபெற இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்த கூட்டத்தில் கழக சட்டசபை உறுப்பினர்கள் எல்லோரும் நோய் தடுப்பு நடவடிக்கைகளுக்கு முற்பட்டு சமூக இடைவெளியை கடைப்பிடித்து முகக்கவசம் அணிந்து பல தற்காப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு சட்டசபை உறுப்பினர்களின் அடையாள அட்டையுடன் தவறாமல் பங்கேற்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம் என்று தெரிவித்திருக்கிறார்கள்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் ஆற்றிய எதிர்க்கட்சித் துணைத் தலைவர் பதவி மற்றும் சட்டமன்ற சொல்லடா உள்ளிட்டோர் தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்பிருப்பதாக தெரிகிறது. எதிர்க்கட்சித் துணைத் தலைவர் பதவிக்கு வைத்திலிங்கம் மற்றும் நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்டோர் யாரேனும் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார் என்று தெரிகிறது. சட்டமன்ற கொறடா பதவிக்கு கேபி முனுசாமி அல்லது கே பி .அன்பழகன் உள்ளிட்டோரின் யாரேனும் ஒருவருக்கு வாய்ப்பு வழங்கப்படலாம் என்று தெரிவிக்கப்படுகிறது.