இறந்துவிட்டேன் என்று என்னை புதைக்க சென்ற பொழுது கே ஆர் விஜயா தான் என்னை காப்பாற்றினார்!! கண் கலங்கும் கே ஆர் வத்சலா!!

Photo of author

By Gayathri

1970 ஆம் ஆண்டு காலம் வெல்லும் என்னும் திரைப்படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் தான் கே ஆர் வத்சலா. இவர் பழம்பெரும் நடிகை கே ஆர் விஜயா அவர்களின் தங்கை ஆவார்.

இவர் தமிழில் மட்டும் இன்றி தெலுங்கு மலையாளம் உள்ளிட்ட திரைத்துறையிலும் பல படங்கள் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படிப்பட்ட நடிகை தன்னுடைய அக்காவால் தான் நான் இன்று உயிரோடு இருக்கிறேன் என்று கண்கலங்கி கூறியது இனி வருமாறு :-

நான் பிறக்கும் போது ராசி நட்சத்திரம் பார்த்தாங்க. அதுல என்னோட நட்சத்திரம் மூலம். இது குடும்பத்துக்கு ஆகாதுன்னு நான் ராசியில்லாதவள் என்று சொன்னார்கள்.
அதனால், எனக்கு சரியாக தாய்ப்பால் கூட கிடைக்கவில்லை. அதனால் ருமாட்டிக் காய்ச்சல் ஏற்பட்டது. அதனால் நான் இறந்துவிட்டேன் என்று என்னை வீட்டிற்கு பின்புறம் புதைக்க கூட ஏற்பாடு செய்துள்ளனர்.

அப்போது, என்னோட அக்கா பழநி மலைக்கு சென்று, நவபாஷாணம் சிலையில் உருவான மூலவர் முருகனின் அபிஷேக பாலை கொண்டு வந்து என் வாயில் ஊற்றியுள்ளார். அப்போது என்னுடைய சுண்டு விரல் அசைவு ஏற்பட்டதாக தெரிவித்து கண்கலங்கி இருக்கிறார்.

மேலும் இவர் 12 வயதாக இருந்த போதே காலம் வெல்லும் என்ற தமிழ் படத்தில் நடித்துள்ளார். ஆனால், இந்தப் படம் பெரிதாக ஹிட் கொடுக்கவில்லை. ஆதலால் படிக்க சென்று பின்னர் திருமணம் செய்து கொண்டுள்ளார். 15 ஆண்டுகளுக்கு பிறகு திரும்ப சினிமாவுக்குள் நுழைந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.