பாலிவுட் வாய்ப்புகளை மறுக்கும் வளர்ந்து வரும் இளம் நடிகை… இதுதான் காரணமா?

Photo of author

By Vinoth

பாலிவுட் வாய்ப்புகளை மறுக்கும் வளர்ந்து வரும் இளம் நடிகை… இதுதான் காரணமா?

நடிகை கீர்த்தி ஷெட்டி தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் வளர்ந்து வரும் நடிகையாக அறியப்படுகிறார்.

விஜய் சேதுபதி வில்லனாக நடித்த உப்பெனா என்ற தெலுங்கு படம் மிகப் பெரிய வெற்றி பெற்றது. அந்த படத்தில் இவருக்கு மகளாக கீர்த்தி ஷெட்டி நடித்திருந்தார். அந்த படம் அவருக்கு முதல் படமாக அமைந்தது. இந்த படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றதை அடுத்து கீர்த்தி ஷெட்டி ஒரே நாள் இரவில் புகழ் வெளிச்சத்தைப் பெற்றார்.

இதையடுத்து தெலுங்கு மற்றும் தமிழ் படங்களில் பல முன்னணி நடிகர்கள் மற்றும் இயக்குனர்களின் படங்களில் நடிக்க ஒப்பந்தம் ஆகி வருகிறார். அதில் சூர்யா நடிக்கும் வணங்கான் திரைப்படமும் ஒன்று. இதன் மூலம் தமிழில் அவர் அறிமுகம் ஆகிறார். அவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான தி வாரியர் திரைப்படம் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி தோல்வி அடைந்தது. ஆனால் அதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் அடுத்தடுத்த படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.

இந்நிலையில் தற்போது பத்திரிக்கையாளர்களை சந்தித்துள்ள அவர் “சினிமாவில் வெற்றியும் தோல்வியும் வருவது சகஜம்தான். எல்லா படங்களிலும் என் கதாபாத்திரம் பிடித்திருந்தால்தான் நடிக்க ஒப்பந்தம் ஆகிறேன். பாலிவுட்டில் இருந்து நிறைய வாய்ப்புகள் வருகின்றன. ஆனால் நான் அவற்றை மறுத்து வருகிறேன். தெலுங்கு மற்றும் தமிழ் மொழியில் நடித்து சாதிக்கவே விருப்பம்’ எனக் கூறியுள்ளார்.