திமுகவின் பிரச்சார பீரங்கியாக இருப்பவர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி. வாயை திறந்து பேசினால் கெட்ட வார்த்தைகள் சரளமாக கொட்டும். ஆனால், அதை ரசிக்கவே ஒரு கூட்டம் இருப்பதால் திமுக தலைமை இவர் ,மீது பெரிதாக எந்த நடவடிகையும் எடுக்காது. திமுக மேடைகளில் அசிங்கமாக பேசி சர்ச்சைகளில் சிக்குவார்.
மற்ற கட்சியினர் அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தால் திமுக இவர் மீது நடவடிக்கை எடுப்பது போல பாவ்லா காட்டிவிட்டு பின்னர் மீண்டும் அவரை திமுக மேடைகளில் பேச விடுகிறார்கள். சில வருடங்களுக்கு முன்பு பாஜக கட்சியை சேர்ந்த நடிகை குஷ்புவை ஒரு மேடையில் மிகவும் மோசமாக கிருஷ்ணமூர்த்தி பேசிவிட்டார். இதற்கு குஷ்பு கடும் எதிர்ப்பு தெரிவித்ததோடு காவல் நிலையத்தில் புகாரும் அளித்தார். அப்போது சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது திமுக நடவடிக்கை எடுப்பது போல பாவ்லா காட்டியது. தற்போது விஜயை பற்றி பேசப்போய் இஸ்லாம் மதத்தை சேர்ந்தவர்களை பேசி சர்ச்சையில் சிக்கியிருக்கிறார் கிருஷ்ணமூர்த்தி.
2 நாட்களுக்கு முன்பு திமுக மேடையில் பேசிய கிருஷ்ணமூர்த்தி விஜயை கடுமையாக விமர்சித்து பேசினார். சில நாட்களுக்கு முன்பு தவெக தரப்பில் ரமலான் நோன்பு விரதம் தொடர்பான நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அதில், பல இஸ்லாமியர்கள் கலந்துகொண்டனர். இதைப்பற்றி பேசிய சிவாஜி கிருஷ்ணமூர்த்தி ‘அவன் நோன்பு திறக்காறான்னு வரான். அங்க 4 பாய் நிக்குறான். ஏன்டா இப்படின்னு கேட்டா ‘எல்லா இடத்திலும் நாங்க 4 பேர் நிப்போம்னு சொன்னான். இதுக்கு எச்ச சோறு திங்கலாம்’ என பேசினார்.
இதற்கு இஸ்லாமியர்கள் அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறது. மேலும், அதிமுகவினரை சேர்ந்த பலரும் சமூகவலைத்தளங்களில் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி கடுமையாக திட்டி வருகிறார்கள். இந்நிலையில் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் ‘ராயபுரத்தில் நான் பேசியபோது கலைஞர் கருணாநிதி இஸ்லாம் மக்களுக்கு என்னென்ன திட்டங்களை கொண்டு வந்தார் என சொல்லி கொண்டிருந்தேன். இஸ்லாம் மக்களால் தனக்கு ஆபத்து என சொல்லி பாதுகாப்பு கேட்ட விஜயை பற்றி பேசும்போது முஸ்லீம் மக்களை நான் இழிவு படுத்திவிட்டதாக இட்டுக்கட்டி பரப்புரை செய்கிறார்கள். நான் வாழும் பகுதி முஸ்லீம்கள் வாழும் பகுதி. என் வீட்டில் இருப்பது மசூதி. ஆதங்கத்தில் பேசும்போது சில வார்த்தைகள் தவறி இருக்கலாம். அதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்’ என அந்த வீடியோவில் பேசியிருக்கிறார்.
என் அன்பு இஸ்லாமிய உறவுகளே…
நான் பேசிய கருத்தை வேறுவிதமாக எதிர்க்கட்சிகள் திரித்து பரப்புகின்றனர்.நான் பயன்படுத்திய வார்த்தை உங்கள் மனதை காயப்படுத்தி இருந்தால் வருத்தம் தெரிவிக்கிறேன்🙏 pic.twitter.com/i4l3YXuDfS
— Sivaji Krishnamurthy (@Sivajikm_offl1) March 16, 2025