KRISHNA JAYANTHI 2024: கிருஷ்ண ஜெயந்திக்கு விரதம் இருந்து வழிபடுவது எப்படி?

0
195
Folks if you do this on Krishna Jayanti day.. there will be unhindered cash flow!!
Folks if you do this on Krishna Jayanti day.. there will be unhindered cash flow!!

KRISHNA JAYANTHI: கிருஷ்ண ஜெயந்தி வரும் 25 ஆம் தேதி வர உள்ள நிலையில் எப்படி வழிபட வேண்டும் என்பது குறித்து இந்த பதவில் பார்க்கலாம்.

இந்து கடவுள் மகாவிஷ்ணு அவர்கள் எடுத்த ஒன்பதாவது அவதாரம் கிருஷ்ணர் அவதாரம்.இவர் அதர்மத்தை வேரோடு அழித்து தர்மத்தை நிலைநாட்ட கிருஷ்ணர் அவதாரம் எடுத்தார் என்று புராணங்கள் கூறுகிறது.

வருகின்ற 26 ஆம் தேதி திங்கட்கிழமை தேய்பிறை அஷ்டமி,ரோகிணி நட்சத்திரம் மற்றும் ரிஷப லக்கனம் சேர்ந்து வருவதால் அந்நாளில் கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடப்பட இருக்கிறது.இந்து மக்கள் சிறப்பாக கொண்டாடும் பண்டிகைகளில் ஒன்றாக கிருஷ்ண ஜெயந்தி இருக்கிறது.இந்த கிருஷ்ண ஜெயந்தி நாளில் குழந்தைகளுக்கு கிருஷ்ணர் மற்றும் ராதை வேடமிட்டு சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம்.இந்த நாளில் பகவான் கிருஷ்ணருக்கு விரதம் இருந்தும் வழிபடும் வழக்கத்தை பலர் பின்பற்றி வருகின்றனர்.

இப்படி விரதம் இருக்கும் நபர்கள் சில விஷயங்களை கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும்.விரதம் இருப்பவர்கள் முந்திய நாளில் ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.உடலை நீரேற்றத்துடன் வைத்துக் கொள்ள வேண்டியது அவசியம்.இல்லையென்றால் விரத நாளில் மயக்கம்,உடல் சோர்வு உள்ளிட்ட பிரச்சனைகள் ஏற்படக் கூடும்.

உடல் நலக் கோளாறு இருப்பவர்கள்,வயதானவர்கள் கிருஷ்ணருக்கு விரதம் இருக்கிறீர்கள் என்றால் பால்,பழம் உள்ளிட்ட பொருட்களை எடுத்துக் கொள்ளலாம்.முடியாதவர்கள் காலை நேரத்தில் மட்டும் விரதம் இருக்கலாம்.

மாலை நேரத்தில் வீட்டில் இருக்கின்ற கிருஷ்ணனின் சிலையை பாலால் அபிஷேகம் செய்து அலங்கரிக்க வேண்டும்.கிருஷ்ணருக்கு உகந்த பொங்கல் மற்றும் வெண்ணையை நெய்வேத்தியமாக படைக்கலாம்.இப்படி கிருஷ்ண ஜெயந்தி அன்று விரதம் இருந்து வழிபட்டால் கிருஷ்ணர் நம் வீட்டிற்கு வந்து அருள் புரிவர் என்பது ஐதீகம்.

Previous articleTEA-யை அதிக நேரம் சூடு படுத்தி குடிக்கும் நபரா.. கட்டாயம் உடலில் இந்த பிரச்சனை உண்டாகும்!!
Next articleபெரும் ஆபத்து.. காலை நேரத்தில் இந்த உணவுகளை பெண்கள் அறவே தவிர்க்க வேண்டும்!!